For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விதவிதமாக போட்டோஸ் வெளியிடும் தமிழ் சினிமாவின் இன்னொரு நூடுல்ஸ்

  |

  மும்பை : தமிழில் கோவா,கோ போன்ற படங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் நம்மை சற்று உற்று நோக்க வைத்தவர் நடிகை பியா. இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்து பின்பு திரைத்துறைக்குள் வந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே .

  கிளாமர் புகைப்படங்கள் வெளியிட்ட நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்- வீடியோ

  எப்போதும் துருதுரு பேச்சு, ஸ்ப்ரிங் மண்டை, உயரம் சற்று குறைந்த குயூட் கேர்ள் இதுபோன்ற தனக்கே உரித்தான சில தனித்துவமான பண்புகளை கொண்டவர் தான் பியா..

  தல அஜித்துடன் ஏகன் படத்தில் நடித்தார் , அதில் நடிக்கும் போது தல அஜித்திடம் ஒரு நற்பெயர் அவருக்கு எப்போதுமே உண்டு. அந்த நற்பெயர் தான் அவருக்கு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

  குளிச்சிட்டு அப்படியே வந்துட்டீங்க போல.. வெறும் டவலுடன் நிற்கும் நடிகை.. பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்குளிச்சிட்டு அப்படியே வந்துட்டீங்க போல.. வெறும் டவலுடன் நிற்கும் நடிகை.. பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்

  ஏகனில் அறிமுகம்

  ஏகனில் அறிமுகம்

  தல அஜித் அவர்கள் தான் ஏகன் படத்தின் போது இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் பியாவை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் பியா, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய கோவா படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார் .

   பெரிய அடையாளம்

  பெரிய அடையாளம்

  ஏகன் ,கோவா படங்கள் அவரது சினிமா கேரியரில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுத்தந்தது என்றே சொல்லலாம் . அதில் அவர் பார்ப்பதற்கு அச்சு அசல் கோவாவில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் போலவே சிறப்பாக நடித்திருப்பார் . மேலும் அந்த படத்தில் வரும் " இதுவரை இல்லாத உணர்விது" பாடல் அப்போது இருந்த இளசுகளிடம் மிகப்பெரிய போதையாகவே இருந்தது. தொலைக்காட்சியிலும்,ரேடியோவிலும் இந்த பாடல் ஒலிக்காத நாட்களே இல்லை.

   பியாவின் பிளஸ்

  பியாவின் பிளஸ்

  அந்த அளவுக்கு பட்டி தொட்டியெல்லாம் பரவியது. அந்த பாடல் போலவே பியாவுக்கும் ஒரு தனி ரசிகர் கூட்டமே தானாக உருவானது.மீண்டும் யாரும் சற்றும் எதிர்பாக்காத வகையில், இயக்குனர் k.v ஆனந்த் அவர்களின் இயக்கத்தில் கோ படத்தில் சரோ என்ற ரோலில் ஒரு இன்னொசென்ட் பெண்ணாக எவ்வளவு சோகம் இருந்தாலும் ஈஸியாக கடந்து செல்லும் ஒரு பெண்ணாக கேசுவலாக நடித்திருப்பார். அதை பார்த்து ச்ச இப்படி ஒருபொண்ணு நம்ம கூட இல்லையே என ஏங்கிய பல ஆண்களும் உண்டு.

   கொஞ்சம் படம்

  கொஞ்சம் படம்

  இவர் நடித்த படங்களுக்காக அவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும் பரிந்துரைக்கபட்டது. அதன்பின் இவர் மலையாளம்,தெலுங்கு, இந்தி மற்றும் இங்கிலிஷ் என பல மொழிகளில் தனது நடிப்பு பயணத்தை கொண்டு சென்றார்.சில படங்களே நடித்தாலும் அவருக்கென்று ரசிகர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் .ரசிகர்கள் கொடுக்கும் செல்ல பெயர்கள் தான் இவருக்கு முதல் விருது.

   ரசிகர்களுக்கு விருந்து

  ரசிகர்களுக்கு விருந்து

  இந்த லாக்டவுன் சமயத்தில் தனது வித விதமான போட்டோக்களை வித விதமான ஆடைகளுடன் அவரது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் எடுத்து பகிர்ந்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது. அதில் சேலையில் மாராப்பு போடாமல் செம்ம லுக்கில் போஸ் கொடுத்திருப்பார், அதை பார்த்த அவரது ரசிகர்கள் நீங்கள் மகாராணி போன்று இருக்கின்றீர்கள் என அவரை புகழ்ந்து தள்ளுகின்றனர்.

  English summary
  Pia bhajpai is a hyperactive,dedicated heroine in the cinema industry .thala Ajith recommended her to director VenkatPrabhu .he introduced her in the movie called Aegan .and she acted in some movies called Goa,ko & now a days she is posting her photos and videos in the social network that goes viral among her fans .
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X