»   »  டாப்ஸி புண்ணியத்தால் டாட்டூ கடைகளில் நிரம்பி வழியும் பெண்கள் கூட்டம்

டாப்ஸி புண்ணியத்தால் டாட்டூ கடைகளில் நிரம்பி வழியும் பெண்கள் கூட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிங்க் படத்தில் டாப்ஸி கழுத்தில் இருக்கும் டாட்டூ போன்று போட இளம்பெண்கள் டாட்டூ கடைகளில் குவிகிறார்களாம்.

அனிருத்தா ராய் சவுத்ரி இயக்கத்தில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்த பிங்க் படம் கடந்த 16ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிங்க் படம் உலக அளவில் இதுவரை ரூ.72. 44 கோடி வசூல் செய்துள்ளது.

படம் விரைவில் ரூ. 100 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாப்ஸி

டாப்ஸி

பிங்க் படத்தில் அமிதாப் பச்சனின் நடிப்பை எப்படி அனைவரும் பாராட்டுகிறார்களோ அதே போன்று டாப்ஸியின் நடிப்பும் பாராட்டுகளை பெற்றுள்ளது. பாலிவுட்டில் டாப்ஸிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி பிங்க் படம் ஆகும்.

டாட்டூ

டாட்டூ

படத்தில் டாப்ஸியின் கழுத்தில் பறவை றெக்கை முளைத்து பறக்கும் கட்சியை டாட்டூவாக போட்டிருப்பார். அந்த டாட்டூ அவரின் கதாபாத்திரத்தை குறிக்கும் வகையில் வரையப்பட்டது.

கிராக்கி

கிராக்கி

பிங்க் படத்தில் டாப்ஸியின் கழுத்தில் இருப்பது போன்ற டாட்டூவை எங்களுக்கும் போட்டுவிடுங்கள் என்று கூறி ஏராளமான பெண்கள் டாட்டூ கடைகளில் குவிந்து வருகிறார்கள்.

வலி

வலி

கழுத்து எலும்பு இருக்கும் இடத்தில் டாட்டூ போட்டால் வலிக்கும். வலித்தாலும் பரவாயில்லை அந்த டாட்டூவை போட்டுவிடுங்கள் என்று இளம்பெண்கள் அடம்பிடிக்கிறார்களாம்.

English summary
Taapsee's tattoo in Pink movie has become a craze among girls and women.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil