அள்ளி இறைக்கறீங்களே இப்படி.. உருகிய அமலா பால்.. பிளவுஸ் டிசைன் சூப்பர்!
சென்னை : வெவ்வேறு பிரச்சினையில் வாழும் 4 பெண்களின் உணர்வுகளை ஒவ்வொரு கதையாக தொகுத்து அழகாக பின்னி பிணைக்கப்பட்ட கதையே பிட்டா கதலு.
இந்த படம் அண்மையில் நெட் பிளிக்ஸில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இணையத்தில் பலரின் பாராட்டுக்களை பெற்று வரும் இப்படத்தை தயாரித்த நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்கு நடிகை அமலா பால் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.

பிட்டா கதலு
நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தற்போது இந்திய மார்க்கெட்டை கைப்பற்றும் பொருட்டு பல நேரடி திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கில் பிட்டா கதலு என்ற தொடரை தயாரித்துள்ளது.

வரவேற்பு
அமலாபால், ஸ்ருதி ஹாசன், ஈஷா ரெபா, கொலைகாரன் படப் புகழ் ஆஷிமா நர்வால் ஆகிய முன்னணி நடிகைகள் நடித்துள்ள இந்த தொடர் இணையத்தை கலக்கி வருகிறது. அமலா பால் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள கவர்ச்சியான காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

4 பெண்களின் கதை
எக்ஸ் லைஃ நிறுவனத்தின் விக்ரமாக சஞ்ஜித் பணிப்பெண்ணா ஸ்ருதிஹாசன் தனது கதாபாத்திரம் உணர்ந்து நடிப்பை வழங்கியுள்ளார். ஆண்களால் நிராகரிக்கப்படும் பெண் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் லஷ்மி மஞ்சு மற்றும் ஈஷா ரெப்பா நடித்துள்ளார் . காதல், ஏமாற்றம், துரோகம், காமம் என அனைத்து எமோஷனலும் கலந்து உருவாக்கியுள்ளார்

சிறப்பான நடிப்பு
அமலா பால் இந்த வெப் தொடரில் தன்னை விட 18 வயது மூத்த தொழிலதிபரின் இளம் மனைவியாக நடித்துள்ளார். கணவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜகபதி பாபு மனைவியை எப்போதும் சந்தேகக் கண்ணுடனே பார்க்கிறார். 2 குழந்தைகளுக்கு அம்மாவாகவும் வயதான கணவருடன் வாழ்க்கையை ஓட்டும் மனைவியாகவும் அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார் அமலாபால்.
மனமார்ந்த நன்றி
இப்படம் குறித்து தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமலா பால், மீரா மீது நீங்க பொழிந்த அன்பிற்கு நன்றி என்றும், சிறந்த படைப்பு மற்றும் கருத்து சுதத்திரத்தை ஆதரிக்கும் நெட் பிளிக்ஸ் இணையத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வாக பதிவிட்டுள்ளார். அவர் போட்ட தேங்ஸ்ஸை விட அவர் போட்டுள்ள பிளவுஸ் ஸ்டைல்தான் பலரையும் கவர்ந்துள்ளதாம்.. விழுந்து விழுந்து கமெண்ட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











