இந்த சொப்பன சுந்தரியை இப்போ.. புதிய காதலருடன் போஸ் கொடுத்த இலங்கை நடிகை.. ரசிகர்கள் ஷாக்!

சென்னை: முன்னாள் கணவரை பிரிந்து வாடுகிறேன்னு போன வாரம் தான சொன்னீங்க.. அதுக்குள்ள புதிய காதலர் இவர் தான்னு ஒருத்தரை அறிமுகப்படுத்துறீங்க என இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியை அதிர்ச்சியுடன் அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

மாடல் அழகியும் நடிகையுமான பியூமி ஹன்சமாலி தனது 18 வயதிலேயே வேணு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது கணவரை பிரிந்து தனது 8 வயது மகன் கவினுடன் வாழ்ந்து வருகிறார்.

முதல் கனவே

முதல் கனவே

வசானாய சண்டா, லக் நவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பியூமி ஹன்சமாலி சமீபத்தில் தனது முன்னாள் கணவரின் பெயர் வேணு என்றும், அவரை ரொம்பவே மிஸ் செய்வதாகவும் கூறி, அவருடன் மிகவும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இவன் தான் என் உலகம்

இவன் தான் என் உலகம்

மேலும், கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கணவரை பிரிந்து, தனது மகன் கவினுடன் வாழ்ந்து வரும் நடிகை பியூமி ஹன்சமாலி, மகன் கவின் தான் தனது உலகம் என ஏகப்பட்ட பதிவுகளில் கூறியுள்ளார். மகனுடன் நீச்சல் குளம், சுற்றுலா தளங்கள் என எங்கே சென்றாலும், அங்கே எடுக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

இவங்களாம் என் நண்பர்கள்

இவங்களாம் என் நண்பர்கள்

இந்நிலையில், தற்போது குடும்ப விழா ஒன்றில் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களை எல்லாம் பதிவிட்டு, இவர்கள் எல்லாம் நண்பர்கள் என கேப்ஷன் கொடுத்துள்ள நடிகை பியூமி ஹன்சமாலி, தனது புதிய காதலர் குறித்த அறிவிப்பையும் மற்றொரு புகைப்படத்தில் அறிவித்துள்ளார்.

இவர் தான் அவர்

இவர் தான் அவர்

இலங்கையை சேர்ந்த சண்டிமால் ஜெயசிங்கே என்பவருடன் மிக நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு, ‘லவ்' எனக் குறிப்பிட்டு இவர் தான் புதிய காதலர் என்பதை உரக்க சொல்லி இருக்கிறார் நடிகை பியூமி ஹன்சமாலி. முன்னதாக, சண்டிமால் ஜெயசிங்கே உடன் சேர்ந்து எடுத்த பல புகைப்படங்களையும் பியூமி தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் ஷாக்

ரசிகர்கள் ஷாக்

சமீபத்தில் தான் தனது முன்னாள் கணவரை ரொம்ப மிஸ் பண்ணுவதாக அவருடன் எடுத்துக் கொண்ட லிப் லாக் புகைப்படங்களை பதிவிட்டு ஓவர் ஃபீலிங்கை கொட்டித் தீர்த்து இருந்தீர்கள், அதற்குள் இன்னொருவரை காட்டி, இவர் தான் புதிய காதலர் என இப்படி பேரதிர்ச்சி கொடுக்கிறீங்களே என பியூமியின் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X