'பீட்சா' வரட்டும் நான் யார் என்று தெரியும்: நடிகை பார்வதி ஓமனக்குட்டன்

By Siva

மும்பை: பீட்சா இந்தி படம் ரிலீஸான பிறகு நான் வெறும் மாடல் மட்டும் அல்ல என்பது தெரியும் என நடிகையும், மாடலுமான பார்வதி ஓமனக்குட்டன் தெரிவித்துள்ளார்.

பார்வதி ஓமனகுட்டனை நினைவு இருக்கிறதா? இல்லை என்றால் நினைவுபடுத்துவோம். அஜீத் நடித்த பில்லா 2 படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் இந்த பார்வதி ஓமனக்குட்டன். 2008ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் பட்டத்தை வென்ற பார்வதி இந்தியில் யுனைடெட் சிக்ஸ் என்ற படத்தில் நடித்தார். படம் ஓடவில்லை.

அதன் பிறகே தமிழுக்கு வந்தார்.

பெயருக்கு தான்

பெயருக்கு தான்

பில்லா 2 பெரிய படம், பெரிய நடிகர் என்று நினைத்து நடித்தார் பார்வதி. ஆனால் படத்தில் அவர் பெயர் அளவுக்கே ஹீரோயினாக வந்து சென்றார்.

செட்டாகவில்லை

செட்டாகவில்லை

பில்லா 2 படத்தை அடுத்து பார்வதி தனது தாய் மொழியான மலையாளத்தில் கேக்யூ என்ற படத்தில் நடித்தார். ஆனால் அவருக்கு எந்த படமும் பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை.

பீட்சா

பீட்சா

நல்ல கதாபாத்திரம் கிடைக்காதா என்று ஏங்கிய பார்வதிக்கு விஜய் சேதுபதி நடித்த பீட்சா படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வந்த வாய்ப்பை கப்பென்று பிடித்துக் கொண்டார்.

நடிகை

நடிகை

பீட்சா படத்தின் கதை அருமை. நான் பீட்சா தமிழ் படத்தை பார்த்து அசந்துவிட்டேன். பீட்சா இந்தி ரீமேக் வந்தால் நான் வெறும் மாடல் மட்டும் அல்ல என்னால் நன்றாக நடிக்கவும் முடியும் என்பது அனைவருக்கும் தெரியும் என்றார் பார்வதி.

நம்பிக்கை

நம்பிக்கை

இந்தியிலும் பீட்சா என்ற பெயரில் ரீமேக் செய்யப்படும் இந்த படம் தான் தனது திரையுலக பயணத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார் பார்வதி ஓமனக்குட்டன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X