Chinmayi: குடிபோதையால் நடந்த ஒரு விபத்து.. காரில் சிக்கிய சின்மயி.. குமுறல் பதிவு!

சென்னை: (Chinmayi) பிரபல பின்னணி பாடகி சின்மயி சாலை விபத்து ஒன்றில் சிக்கி உள்ளார்.

ஒரு தெய்வம் தந்த பூவே என்று வசீகரிக்கும் காந்தக்குரலின் மூலம் அனைவரையும் கட்டிப்போட்டவர் பாடகி சின்மயி.

play back singer Chinmayi Sripada met car accident in chennai

இவர் எத்தனை வேகமாக வளர்ந்தாரோ, அத்தனை வேகமாக சர்ச்சைகளும் பஞ்சமில்லாமல் வளர்ந்தார். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு டப்பிங் கொடுத்து இருக்கிறார்.

பின்னணி பாடகி சின்மயி: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி பாடகியாகவும், பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருக்கும் சின்மயி. இவர், பல பாடல்களை பாடி பாராட்டுகளையும், புகழையும் பெற்றுள்ளார். மேலும் இவர், சமூக கொடுமைக்கு எதிராக தனது கருத்துக்களை அடிக்கடி தெரிவித்து வரும் இவர், பெண் வன்கொடுமைக்கு எதிராக அதிகமாக குரல் கொடுத்துள்ளார்.

தொடரும் பிரச்சனை: இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே ஒரு பனிப்போரே ஏற்பட்டு, அந்த விவகாரம் தற்போது வரை புகைந்து கொண்டுதான் இருக்கிறது.

play back singer Chinmayi Sripada met car accident in chennai

இரட்டை குழந்தை: பிரபல பாடகியான சின்மயி மாஸ்கோவின் காவேரி படத்தில் ஹீரோவாக அறிமுகமான ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் மற்றும் டப்பிங் கலைஞரான இவர், தமிழ் மற்றும் தெலுங்கு என பல படங்களில் நடித்துள்ளார். திருமணமாகி எட்டு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு இரண்டைக் குழந்தை பிறந்தது.

விபத்தில் சிக்கினார்: சோஷியல் மீடியா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சின்மயி, விபத்தில் சிக்கியது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், குழந்தைகளுடன் சின்மயி காரில் சென்றபோது குடிபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் வேகமாக எனது கார் மீது மோதிவிட்டு, நிற்காமல் தப்பித்தும் சென்று விட்டார்.

play back singer Chinmayi Sripada met car accident in chennai

இந்த விபத்தில் தனக்கோ அல்லது தன் உடன் இருந்தவர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்றும், தாங்கள் பத்திரமாக தப்பித்ததை நினைத்து மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்றும் சின்மயி பதிவிட்டுள்ளார். இந்த பதிவினைப் பார்த்த ரசிகர்கள் அவரின் என்ன ஆச்சு என நலம் விசாரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X