“டைவர்ஸ் பண்ணிட்டு வாங்க; நான் ரெடி” - குஷ்புவின் புதிய தோற்றத்தைப் பார்த்து சொக்கிப் போன ரசிகர்
சென்னை: நடிகை குஷ்பு நேற்று வெளியிட்ட புதிய தோற்றத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர் சொக்கிப் போய், டைவர்ஸ் பண்ணிட்டு வாங்க நான் ரெடியா இருக்கேன் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
தற்போது லண்டனில் இருக்கும் குஷ்பு குட்டைப் பாவாடை அணிந்து நேற்று பார்க்க 16 வயது பெண் போன்ற தோற்றத்தில் ஒரு படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு முன்பு குண்டான தோற்றதில் இருந்த குஷ்பு, கோவிட் காலக்கட்டத்தில் உடற்பயிற்சி, டயட் உணவு என பல முயற்சிகளுக்குப் பிறகு தற்போது எடை குறைந்திருக்கிறார்.

சுந்தர் சிக்கு ஆப்பு
சமீபகாலமாக குஷ்பு வெளியிடும் புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் பலரை குஷிபடுத்தி வருகின்றது. அடடா சின்னத்தம்பி குஷ்பு மாதிரியெ இருக்கீங்க, அண்ணாமலை குஷ்பு மாதிரி இருக்கீங்க என அந்தந்த படங்களில் அவர்கள் ரசித்த குஷ்புவைக் குறிப்பிட்டு மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். அவர்களில் சில ரசிகர்கள் இன்னும் எல்லை மீறி குஷ்புவின் கணவர் சுந்தர் சிக்கு ஆப்பு வைக்கும் வகையில், டைவர்ஸ் பண்ணிட்டு வாங்க நான் ரெடி எனப் பின்னூட்டம் இட்டு வருகின்றனர்.

ஒரே பொண்டாட்டி டா
இதனிடையே குஷ்புவின் புதிய படங்கள் மீம் கிரியேட்டர்களுக்கு நல்ல தீனியாகவும் இருந்து வருகின்றது. ஆனால் அவற்றையும் குஷ்பு ரசிக்கத் தவறுவதில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் குஷ்பு வெளியிட்ட ஷெல்ஃபி ஒன்றை வைத்து மீம்ஸ் ஒன்று வெளிவந்தது. அதில், இது குஷ்புன்னு சொன்னா சுந்தர் சி கூட நம்ப மாட்டாருடா என எழுதியிருந்தனர். அதனைப் பகிர்ந்த குஷ்பு, 'ஒரே பொண்டாட்டி நம்பி தான் ஆகணும்' என நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

லண்டனில் குஷ்பு
லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடிப்பை படித்து வந்த குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா தற்போது படிப்பை முடித்திருக்கிறார். அதற்காக குஷ்பு தற்போது லண்டனில் இருக்கிறார். இது குறித்து தகவல் தெரிவித்திருக்கும் குஷ்பு, எனது மூத்த மகள் லண்டனில் உள்ள பாரம்பரிய பல்கலைக்கழத்தில் நடிப்புக்கான படிப்பை முடித்திருக்கிறார். அவர் பட்ட கஷ்டங்களுக்குப் பிறகு தற்போது சொந்தமாக அவர் செயல்படப் போகிறார். எனவே நாங்கள் அவரை அறிமுகம் செய்யவோ யாரிடமாவது பரிந்துரை செய்யவோ தேவையில்லை. அவளுக்கு உங்களின் ஆசீர்வாதம் மட்டுமே வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

குஷ்பு மகள் விரைவில் அறிமுகம்
குஷ்புவின் மூத்த மகள் அவந்திக்கா சில வருடங்களுக்கு முன் இணையத்தில் சிலரால் கேலி செய்யப்பட்டார். அவரது உடல் எடையை வைத்து சில விஷமிகள் அவரை கேலிக்குள்ளாக்கினர். இது குஷ்புவையும், அவரது மகளையும், அவரது குடும்பத்தையும் மிகவும் பாதித்தது. அதன் பின்னர் உடல் எடையை குறைக்கும் அத்தனை வழிமுறைகளிலும் இறங்கிய அவந்திகா தற்போது படு ஸ்லிம்மாக பார்க்க ஹீரோயின் போல் உள்ளார். மேலும் லண்டனில் நடிப்பு படித்திருக்கும் அவரை விரைவில் திரையில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











