நீங்க கிசுகிசுக்க நான் தான் கிடைச்சேனா?: நடிகை கரீனா கபூர்
மும்பை: தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் என்று நடிகை கரீனா கபூர் தன்னை பற்றி வதந்தி பரப்புவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் பற்றிய வதந்திகளுக்கு குறைச்சலே கிடையாது. கரீனாவுக்கும் அந்த நடிகைக்கும் பிரச்சனையாம், கரீனாவுக்கும் இந்த நடிகருக்கும் லடாயாம் என்று பலவித வதந்திகள் அவ்வப்போது வரும்.
இந்நிலையில் இது குறித்து கரீனா கூறுகையில்,

பிரச்சனை
கரீனாவுக்கும் அவருக்கும் பிரச்சனையாம், இந்த நபருடன் கரீனா தகராறு செய்தாறாம் என்று கடந்த 10 ஆண்டுகளாக வதந்திகள் பரப்பி வருகிறார்கள்.

வதந்தி
அடுத்தவர்களையும் பாருங்கள். ஏன் எப்பொழுது பார்த்தாலும் என்னைப் பற்றியே வதந்தியை பரப்புகிறீர்கள்? அது ஏன் அனைவரும் என்னை பற்றியே பேச வேண்டும்.

ப்ளீஸ்
பிறரையும் பாருங்கள். தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள். என் கணவர் சைபிடம் இது குறித்து கூறினால் இதை நல்லவிதமாக எடுத்துக் கொள் என்கிறார் என்றார் கரீனா.

தீபிகா
சஞ்சய் லீலா பன்சாலியின் ராம் லீலா படத்தில் இருந்து கரீனா வெளியேறியதால் அந்த படத்தில் தீபிகா நடித்தார். இதையடுத்து கரீனாவுக்கும், தீபிகாவுக்கும் இடையே பிரச்சனை என்று பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.


Click it and Unblock the Notifications











