»   »  கவர்ச்சி 'கேட்கும்' பத்மப்ரியா

கவர்ச்சி 'கேட்கும்' பத்மப்ரியா

Subscribe to Oneindia Tamil

கவர்ச்சி வேடத்தில் நடிக்கனுமா எங்கேயும் போக வேணாடம், என்னை அணுகுங்கள் என்று பேனர் வைக்காத குறையாக நடிகை பத்மப்ரியா தமிழ்பட இயக்குநர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

தவமாய் தவமிருந்து படத்தில் குடும்ப பாங்கான வேடத்தில் நடித்த பத்மப்ரியாவுக்கு தற்போது தன்னை கவர்ச்சியாகத் தான் காட்ட வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்கிறாராம்.

கடந்த வாரம் இவர் நடித்து வெளியான வசந்தின் சத்தம் போடாதே திரைப்படத்தை இவர் ரசிகர்களுடன் சேர்ந்து சத்யம் தியேட்டரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையாம். ஆனால் தற்போது 2 முறை இந்த படத்தை பார்த்து விட்டாராம்.

இந்த படத்தை பார்த்த பத்மப்ரியா கூறும்போது, படம் மிக பிரமாதமாக வந்துள்ளது. முதல் பாதியில் என்னுடைய நடிப்பு மிக அருமை. இயக்குநர் வசந்த் மிக அருமையாக என்னை நடிக்க வைத்துள்ளார்.

ஆனால் ஏன் என்னை எந்த டைரக்டரும் கிளாமராக நடிக்க வாய்ப்பு கொடுப்பதில்லை என்று தெரியவில்லை என தனது ஆதங்கத்தை அழாத குறையாக தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் நடித்துள்ள பிருத்விராஜையும் என்னையும் இணைத்து தப்பு தப்பாக எழுதுகிறார்கள். இந்த வதந்திகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன். நானும், பிருத்தும் (பிருத்விராஜூக்கு பத்மப்ரியா வைத்த செல்ல பெயர்) நல்ல நண்பர்கள் என்று சொல்லியுள்ளார்.

சத்தம் போடாதே ரசிகர்கள் தரப்பில் சத்தம் இல்லாமல் அமுங்கிவிட்டாலும் பத்மப்ரியாவுக்கு தமிழ்ப் படங்களில் தொடர்ந்து வாய்ப்பு வந்து கொண்டு தான் உள்ளன.

இதற்கிடையில் மம்முட்டியின் பழசிராஜா உட்பட 3 மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் பத்மப்ரியா. பத்மாவின் தாய்மொழியும் மலையாளம் தான்.

இது தவிர 'உயிர்' படத்தை இயக்கிய சாமியின் டைரக்ஷனில் 'மிருகம்' என்ற படத்திலும் பத்மப்ரியா நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தில் நடித்த பத்மப்ரியாவின் டார்ச்சரால் தயாரிப்பாளர் முதல் லைட்பாய் வரை அனைவரும் அழாத குறைதானாம். ஒரு வழியாக இந்தப்படம் முடிந்த ரிலீசுக்கு தயார் நிலையில் வந்துள்ளது.

அதெல்லாம் சரி, கவர்ச்சி வேடம் கொடுங்கள் என்று கேட்கும் பத்மப்ரியா, பிறகு ஏன் மிருகம் படத்தில் அப்படியெல்லாம் நடிக்கமாட்டேன் என்று எழுதி வாங்கிவிட்டு நடித்தாராம். சாமியிடம் தான் கேட்க வேண்டும்.

Read more about: padmapriya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil