சினேகாவைச் சூழ்ந்த ரசிகர்கள்... லேசான தடியடி நடத்தி மீட்ட போலீஸ்

அவரை மீட்க போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
பிரபல நடிகை சினேகா ஏராளமான கடை திறப்பு மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போதெல்லாம் அவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் சூழந்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது.
இந்த முறையும் இதே மாதிரி சம்பவம் நடந்தது. சமீபத்தில் திருப்பூரில் ஒரு பெரிய நகைக்கடை திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தார் சினேகா. திருப்பூரில் சினேகா இறங்கியதுமே கூட்டம் எக்கச்சக்கமாகக் கூடிவிட்டது.
ஆரம்பத்தில் உற்சாகமாக கையசைத்தபடி, தனக்கே உரிய ஸ்டைலில் சிரித்துக் கொண்டிருந்த சினேகா, கூட்டம் சூழ்ந்துவிட்டதால், வெளியேற முடியாமல் தடுமாறினார்.
வேறுவழியின்றி போலீசார் உதவிக்கு அழைக்கப்பட்டனர். உடனே அவர்கல் லேசான தடியடி நடத்திய பிறகே கூட்டம் கலைந்தது. பின்னர் சினேகா நகைக்கடையைத் திறந்துவைத்துவிட்டு பாதுகாப்பாக கோவை விமான நிலையம் விரைந்தார்.


Click it and Unblock the Notifications











