Pongal celebration: திரை அழகிகளின் பொங்கல் ஸ்பெஷல் போட்டோஸ்!

சென்னை: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நல்ல நாளில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை உடுத்தி, புது பானையில் பச்சரிசி, வெல்லம் போட்டு பொங்கல் வைத்து சூரியனுக்கு வழிபடுவார்கள். அந்த வகையில், திரைப்பிரபலங்களும் பொங்கல் திருநாளை தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியோடு கொண்டாடி உள்ளனர். தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் பொங்கல் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

Pongal 2026 photos 2026
Photo Credit:

கீர்த்தி பாண்டியன்: நடிகரான அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன், அசோக் செல்வனுடன் சேர்ந்து ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்த போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் பண்ணை வீட்டில் அழகாக நடந்தது. தற்போது நடிப்பில் கவனத்தை செலுத்தி வரும் கீர்த்தி பாண்டியன் தனது கணவருடன் பொங்கல் கொண்டாடி உள்ளார். அந்த போட்டோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மாளவிகா மோகனன்: ரஜினியுடன் 'பேட்ட' படத்தில் சசிக்குமாருக்கு மனைவியாக நடித்து தமிழ் சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்தார் நடிகை மாளவிகா மோகனன். அந்த படத்தை தொடர்ந்து 'மாஸ்டர்', 'மாறன்', 'தங்கலான்' போன்ற படங்களில் நடித்து கொஞ்ச நாட்களிலே முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், மாளவிகா மோகனனுக்கு பெரிய ரசிகர் ஆதரவு உருவாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் மாளவிகா மோகனன், தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், ஹிந்தியில் நடித்து வருகிறார். பிரபாஸ் மற்றும் மாளவிகா நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு 'தி ராஜா சாப்' படம் வெளியாகி உள்ளது. இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் பொங்கல் பண்டிகைக்கு கையில் தாமரை பூவுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Pongal 2026 photos 2026
Photo Credit:

டிடி: தொகுப்பாளினியாக வலம் வந்து ரசிகர்களின் மனத்தை வென்ற டிடி பொங்கலுக்கு அட்டகாசமான ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். கையில் மல்லிகை பூவை வைத்துக்கொண்டு வெள்ளி நிறத்தில் புடவையில் வெள்ளி குத்துவிளக்கு போல ஜொலிக்கிறாள் அந்த போட்டோவை வெளியான சில மணி நேரத்திலேயே இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

பொங்கல் ஸ்பெஷல்: நடிகை மகாலட்சுமி ஆரம்பத்தில் தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமாகி அதற்குப் பிறகு சீரியல்களில் கதாநாயகி ஆகவும், வில்லியாகவும் நடித்து வந்தார். இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராமில் பொங்கலுக்கு பானையுடன் இருக்கும் அழகு போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

Pongal 2026 photos 2026
Photo Credit:

நடிகை ரவீனா தாஹா: ராட்சசன் படத்தில் குட்டிப்பெண்ணாக வலம் வந்தவர் நடிகை ரவீனா தாஹா. பின் சீரியலில் அறிமுகமான இவர், பூவே பூச்சூடவா, மௌன ராகம் போன்ற சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனத்தில் இடம் பிடித்தார். மேலும் வேற மாறி ஆபீஸ் என்கிற வெப் தொடரிலும் நடித்துள்ளார். இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், பொங்கலுக்கு இனிக்கும் கரும்புடன் தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X