“பொன்னியின் செல்வன்“ நான் நடிக்க வேண்டியது.. ஏனோ சரியா வரல..அமலா பால் !
சென்னை : மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க முதலில் என்னைத்தான் கேட்டார்கள் என்று நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் மற்றும் லைகா புரோடக்சன் நிறுவனம் இணைந்து பிரம்மாண்ட பொருட் செலவில் பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்து வருகின்றனர். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர்.

இப்படத்தில் பணிபுரியும் தொழில் நுட்ப கலைஞர்கள் யார் என்பதை படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இப்படத்தின் பல காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன.
இப்படத்தை எடுக்க மக்களின் தலைவர் எம்.ஜி.ஆர் அவரை தொடர்ந்து கலைஞர் கருணாநிதி அவரையும் தொடர்ந்து இயக்குநர் நாகா மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் போன்றவர்கள் ஆசைப்பட்டனர். இவர்களை தவிர்த்து இயக்குநர் மணிரத்னம் இதனை எடுத்தே ஆக வேண்டும் என்று இதனை தனது கனவு திரைப்படமாக இயக்க வேண்டும் என்று காத்து கிடந்தார்.
ஆக்ஷன் காட்சியில் வில்லன்களைப் பறக்கவிட்ட சரவணன் அருள்... 200 பேருக்கு பொங்கல் பரிசு தற்போது, அதோ அந்த பறவை போல படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் அமலா பால் பேசினார் அப்போது, பொன்னியின் செல்வன் இப்படத்திற்காக தான் ஆடிசன் சென்றதாகவும். அது ஓரு இளவரசி கதாபாத்திரம் என்றும் அந்த கதாபாத்திரம் மிகவும் கூச்ச முடையது என்பதால் அக்கதாப்பாத்திரம் எனக்கு பொருந்தவில்லை. அதனால், யோசித்தேன் இருந்தாலும், நான் விலகி கொள்கின்றேன் என்று சொல்லவில்லை, இயக்குனர் விலகி போ என்று சொல்லவில்லை. இந்த கதாபாத்திரம் பொருந்தாது என்று தெரிந்து இருவரும் வேண்டாம் என்று முடிவு செய்தோம் என்று கூறினார்.
மேலும், வரலாற்று சிறப்பு மிக்க படத்தில் நடிக்க முதலில் என்னை அழைத்ததை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. இந்த வாய்ப்பு சரியா வரல கண்டிப்பாக, மணிரத்னம் இயக்கத்தில் ஒரு நல்ல படத்தில் மீண்டும் இணைவோம் என்று அமலா பால் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.


Click it and Unblock the Notifications











