ஹாலிவுட்டில் பட்டையை கிளப்பும் பொன்னியின் செல்வன் பட நடிகை.. அதுவும் அந்த மாஸ் இயக்குநர் படத்தில்!

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்து அசத்திய நடிகை சோபிதா துலிபாலா ஹாலிவுட்டில் நடித்துள்ள மங்கி மேன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த மங்கி மேன் வரும் ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

நடிகை சோபிதா துலிபாலா, ராமன் ராகவ் 2.0 எனும் பாலிவுட் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் ஆங்கில படம் ஒன்றிலும் இவர் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய இவர் ஏராளமான படங்களை கை வசம் வைத்துள்ளார்.

ponniyin selvan actress sobhita dhulipala debut in hollywood movie

நடிகை சோபிதா துலிபாலா: துல்கர் சல்மானின் க்ரூப் படத்தின் மூலம் பிரபலமான சோபிதா துலிபாலாவுக்கு மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ராட்சச மாமனே, சொல் என இரு பாடல்கள் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இவருக்கு கிடைத்திருந்தது. முதல் பாகம் மட்டுமில்லாமல் இரண்டாம் பாகத்திலும், அருள்மொழி வர்மனை திருமணம் செய்து கொண்டார்.

வெப் சிரீஸ்: பான் இந்திய நடிகையாக வலம் வரும் சோபிதா துலிபாலா சமீபத்தில் தி நைட் மேனேஜர் எனும் வெப்சீரிஸில் செம ஹாட்டாக நடித்து அனைவரையும் திக்குமுக்காட வைத்தார். சினிமாவில் சென்சார் இருப்பதால் அடக்கி வாசிக்கும் நடிகைகள், ஓடிடி என்றால் எல்லாவற்றுக்கும் தாராளம் காட்டி நடித்திருந்தார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான இந்த வெப்சீரிஸில் 66 வயதான அனில் கபூருடன் படு நெருக்கமாக சோபிதா துலிபாலா நடித்திருந்தது இணையத்தில் பெரும் பேசுபொருளானது.

இதற்கு விளக்கம் கொடுத்திருந்த சோபிதா, இதற்கு முன் இப்படியொரு நெருக்கமான காட்சிகளில் தான் நடித்ததே கிடையாது என்றும் இந்த வெப்சீரிஸில் லிப் லாக் காட்சியில் நடிக்கும் போது, ரொம்பவே நெர்வஸ் ஆகிட்டேன் என்று பேசியிருந்தார். இது மேலும், ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ponniyin selvan actress sobhita dhulipala debut in hollywood movie

மங்கி மேன்: நடிகை சோபிதா தற்போது ஹாலிவுட்டில் தனது சிறகை விரித்து பறந்துள்ளார். இவர், நடிப்பில் மங்கி மேன் திரைப்படம் வெளியாக உள்ளது. பிரபல இயக்குநர் தேவ் படேல் இயக்கி இருக்கும் இந்தப்படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விப்லாஷ் போன்ற விருது பெற்ற திரைப்படங்களில் பணியாற்றி, அவரது பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஷரோன் மேயர், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மங்கி மேன் திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. மங்கி மேன் படம் வருகிற ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X