twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ப்பா.. மேலாடை அணியாமல் போஸ் கொடுத்த பொன்னியின் செல்வன் நடிகை.. இணையத்தில் தீயாய் பரவும் ஹாட் பிக்ஸ்!

    |

    சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்துள்ள சோபிதா துலிபாலாவின் டாப்லெஸ் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

    மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 450 கோடி வசூலை ஈட்டி அசத்தி வரும் நிலையில், அந்த படத்தில் நடித்த நடிகர்களை பற்றி ரசிகர்கள் அதிகமாகவே சோஷியல் மீடியாவில் தேடி வருகின்றனர்.

    முன்னதாக சீதாராமம் படத்தில் நடித்த மிருணாள் தாகூரின் டாப்லெஸ் போட்டோஷூட் புகைப்படங்கள் டிரெண்டான நிலையில், தற்போது சோபிதா துலிபாலா மேலாடை அணியாமல் அரை நிர்வாணமாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளன.

    மனிதாபிமானம் வராத ஜிபி முத்து.. ஐயோ பாவம் கமலே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு! மனிதாபிமானம் வராத ஜிபி முத்து.. ஐயோ பாவம் கமலே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு!

    ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய்

    ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய்

    ஆந்திராவை சேர்ந்தவர் நடிகை சோபிதா துலிபாலா. 30 வயதை கடந்த நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். முதன் முறையாக பாலிவுட்டில் வெளியான ராமன் ராகவ் 2.0 படத்தின் மூலம் சினிமாவில் கடந்த 2016ல் அறிமுகமானார். பாண்ட்ஸ் ஃபெமினா அழகிப் போட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சோபிதா துலிபாலா.

    துல்கர் சல்மான் படத்தில்

    துல்கர் சல்மான் படத்தில்

    துல்கர் சல்மான் நடிப்பில் கேங்ஸ்டர் படமாக வெளியான க்ருப் படத்தின் மூலம் மலையாள ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், கூடாச்சாரி, மேஜர் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மங்கி மேன் எனும் ஆங்கிலப் படத்திலும் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    வானதி

    வானதி

    மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனை திருமணம் செய்ய காத்திருக்கும் வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சோபிதா துலிபாலா. த்ரிஷாவும் இவரும் சேர்ந்து நடனமாடிய "சொல்.. சொல்" பாடலை கடைசி நேரத்தில் கட் செய்து விட்டார் மணிரத்னம். ராட்சச மாமனே பாடலில் கிருஷ்ணராக வேடமிட்டு நடிப்பில் மிரட்டி இருந்தார் சோபிதா துலிபாலா.

    டாப்லெஸ் போஸ்

    டாப்லெஸ் போஸ்

    சோபிதா துலிபாலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடை அணியாமல் டாப்லெஸ் போஸ் கொடுத்து அவர் எடுத்த புகைப்படங்கள் உள்ளன. தற்போது சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் அதனை எடுத்து அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். மேலாடை அணியாத வானதியை பார்த்து இருக்கீங்களா, பொன்னியின் செல்வன் படத்தில் கொடுத்த ஆடையை விட கவர்ச்சி லுக்கில் கிறங்கடித்துள்ளார் என கமெண்ட்டுகள் பறக்கின்றன.

    செம அழகு

    செம அழகு

    மேலாடை அணியாமல் போஸ் கொடுத்தாலும் சோபிதா துலிபாலா செம அழகு என ரசிகர்கள் வர்ணித்து கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர். இந்தியில் சித்தாரா, ஆங்கிலத்தில் மங்கி மேன் உள்ளிட்ட படங்கள் இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன. பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் அருள்மொழி வர்மனுடன் இவர் தான் அரியணை ஏறுவது போல முதல் பாக டிரைலரிலேயே காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Ponniyin Selvan Vanathi actress Sobhita Dhulipala bold photoshoot pics trending in social media. She posted couple of her shirtless photos in her instagram page now circulates in social media platforms.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X