குப்புற படுத்து வில்லு போல யோகா செய்து அசத்திய பூ பார்வதி... கலக்குறீங்க மேடம்!
சென்னை : மலையாள திரைப்படத்துறையில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் மிரட்டி வருபவர் நடிகை பார்வதி.
தமிழில் பூ படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதைத்தொடர்ந்து சென்னையில் ஒரு நாள்,மரியான், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியுடன் முதல்முறையாக இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் பார்வதி இப்பொழுது குப்புற படுத்து வில்லாக உடலை வளைத்து யோகா செய்து அசத்தியுள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

செதுக்கி இருப்பார்
மலையாள சினிமாவை தனது அச்சு பிசகாத நடிப்பின் மூலம் அசரவைத்த வரும் நடிகை பார்வதி தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமாக உள்ளார். தமிழில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கு மிகவும் குறைந்த அளவு திரைப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவை அனைத்திலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் வகையில் கதாபாத்திரங்களை நடிப்பின் மூலம் செதுக்கி இருப்பார்.

பெங்களூர் நாட்கள்
குறிப்பாக தமிழில் இவர் அறிமுகமான பூ இன்றுவரை இவரின் அடையாளமாக உள்ளது. அதனாலேயே பலரும் இவரை பூ பார்வதி எனவே அழைத்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து மரியான்,சென்னையில் ஒரு நாள் , மற்றும் பெங்களூர் நாட்கள் என மிகச் சிறந்த திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

மம்முட்டியுடன் முதல் முறையாக
இயக்குனர் மணிரத்னம் தயாரித்து வரும் நவரசா ஆந்தாலஜி திரைப்படத்திலும் பார்வதி ஒரு பாகத்தில் நடித்தவர் , மலையாளத்தில் இதுவரை பல கதாநாயகர்களுடன் இணைந்து நடித்திருந்தாலும் மம்முட்டியுடன் மட்டும் நடிக்காமல் இருந்தது ரசிகர்களுக்கு குறையாகவே இருக்க அந்த குறையையும் போக்க தற்போது புதிய படமொன்றில் மம்முட்டியுடன் முதல் முறையாக இணைந்து நடித்து வருகிறார்.

அசால்டாக வில்லு யோகா
தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் விருதுகள் பாராட்டுகள் என படத்திற்கு படம் பெற்று வரும் பார்வதி இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்து போய் உள்ளனர். அதில் குப்புற படுத்து உடம்பை வில்லாக வளைத்து கைகளால் கால்கள் இரண்டையும் பிடித்துக்கொண்டு அசால்டாக வில்லு யோகா செய்து அசத்திய பார்வதியின் இந்த அசாத்திய திறமையை பார்த்த ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











