»   »  மாசி பூஜா ஆகும் கொக்கி சஞ்சனா

மாசி பூஜா ஆகும் கொக்கி சஞ்சனா

Subscribe to Oneindia Tamil

கொக்கி சஞ்சனா இப்போது பூஜா காந்தி ஆகி விட்டார். அதாவது தனது பெயரைமாற்றி விட்டாராம்.

பெங்களூரிலிருந்து வந்த மில்க்கி கேர்ள் சஞ்சனா கொக்கி படம் மூலம் தமிழ்ரசிகர்களை கவர்ந்தார். இவரது ஒரிஜினல் பெயர் பூஜா காந்தி. படத்துக்காக இவரதுபெயரை சஞ்சனா என்று மாற்றினார் ஹீரோ கரண்.

இதையடுத்து தமிழில் உடனடி வாய்ப்புக்கள் ஏதும் வராததால், கன்னடத்தில் நடிக்கப் போனார்.தனது பெயரை சஞ்சனா காந்தி என்று மாற்றிக் கொண்டார். ஆனால், பெயர் ராசி ஒர்க்அவுட் அகவில்லை. கவர்ச்சியை அள்ளிவிட்டும் கன்னடம் கை கொடுக்கவில்லை.

இதனால் மீண்டும் பூஜா காந்தி என்ற தனது ஒரிஜினல் பெயருக்கே மாறிவிட்டதோடுதமிழுக்கு அதே பெயரோடு திரும்பி வந்துள்ளார்.

அம்மணி கையில் இப்போது வெயிட்டான இரண்டு படங்கள் உள்ளன.

அதில் ஒரு படம் மாசி. இதில் சஞ்சனாவுக்கு சப்ஜாடான ரோலாம். ஆனால் இந்தப்படத்தில் சஞ்சனாவைத் தவிர மேலும் 2 நாயகிகளும் இருக்கிறார்கள். புவனா, சாம்னாஎன இரு புதுமுகங்களும் சஞ்சனாவுடன் திறமை காட்டுகிறார்கள்.

முப்பெரும் நாயகியர்களுடன் உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக நடிப்பவர்என்.டி.ஆரின் இன்னொரு பேரனான தாரகரத்னா. இவர் நடிக்கும் முதல் தமிழ் படம்இது.

ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் இப்படம் தயாராகிறது. தெலுங்கில்இப்படத்திற்கு முக்கண்டி என்று பெயரிட்டுள்ளனர்.

சுந்தர்.சி.யிடம் உதவியாளராக இருந்த ராஜ்கிருஷ்ணா படத்தை இயக்குகிறார்.படத்தை தயாரிப்பது புன்னைகப் பூ கீதா.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்திலும், மற்ற காட்சிகளைசென்னையிலும் சுடவுள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா தான் இசை.

இதில் சஞ்சனாவுக்கு கிளாமரிலும், நடிப்பிலும் பின்னி எடுக்க வசதி செய்து தரும்கேரக்டராம். அவருக்கு இணையாக சாம்னாவுக்கும், புவனாவுக்கும் புல்லரிக்கவைக்கும் வகையில் கிளாமர் சைடை டெவலப் செய்திருக்கிறாராம் ராஜ்கிருஷ்ணா.

அவர்களும் கிளாமர் களத்தில் கபடி ஆட கலகலப்பாக ரெடியாகி வருகிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil