»   »  தங்க மங்கை பூஜா!

தங்க மங்கை பூஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பூஜாவை கொஞ்ச நாளா காணோமே என்று ஏங்கியவர்களுக்காக இந்த செய்தி. பூஜா தற்போது மீண்டும் ஒருசிங்களப் படத்தில் படு மும்முரமாக நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

இலங்கை, இந்திய கூட்டுத் தயாரிப்பு பூஜா என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் பூஜா பெங்களூர்வாசி.தாத்தா, பாட்டி எல்லோரும் இலங்கையில்தான் இருக்கிறார்கள். இங்கு படங்களில் பிசியான பின்னர் நடிப்புக்காகபெங்களூரில் ஃபிளாட் எடுத்துத் தங்கியுள்ளார் பூஜா.

படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் ஃபிளைட்டை பிடித்து கொழும்புக்குப் பறந்து விடுவார். தமிழ்ப் படங்களில்பூஜா படு பிசியானதைத் தொடர்ந்து இலங்கையிலும் அவர் புகழ் பரவியது.

தாய் மொழியிலும் நடிங்களேன் என்று கேட்டு பூஜாவை தொணத்த ஆரம்பித்தார்கள் சிங்கள தயாரிப்பாளர்கள்.இதையடுத்து சிங்களத்திலும் கதை கேட்க ஆரம்பித்தார் பூஜா. அதில் அஞ்சலிகா என்ற படத்தின் கதை பிடித்துப்போக அப்படத்தில் நடித்தார்.

அஞ்சலிகா இலங்கையில் சூப்பர் ஹிட் படமாகி விட்டது. இதனால் பூஜாவுக்கு அங்கும் டிமாண்ட் ஏற்பட்டுப்போனது. இதையடுத்து இன்னொரு சிங்களப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்தக் கதையும் பூஜாவுக்குப்பிடித்துப் போகவே அப்படத்தில் நடிக்க ஒப்புக் காண்டார்.

இப்போது பூஜாவின் 2வது சிங்களப் படத்தின் ஷூட்டிங் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். இதில்பூஜாவின் பெயர் ரான்மாலி. அப்படீன்னா, தங்கப் பெண் என்று பொருளாம்.

லங்கை சென்று தங்க மங்கையாக நடித்து வரும் பூஜா இப்படத்தை முடித்து விட்டுத்தான் மறுபடியும் தமிழுக்குவருவாராம்.

ஏறி வந்த ஏணியை மறக்காம இருந்தா சரி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil