»   »  மலையாளத்தில் பூஜா!

மலையாளத்தில் பூஜா!

Subscribe to Oneindia Tamil

தமிழ், சிங்களம் என மாறி மாறி கலக்கி வரும் பூஜா அடுத்து மலையாளத்துக்குப் போகிறார்.

கொங்கனி, சிங்கள பெற்றோருக்குப் பிறந்த பூஜா, தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிகையானவர். இப்போதுதமிழிலும், சிங்களத்திலும் மாறி மாறி நடித்து வருகிறார்.

தம்பியை முடித்து விட்டு இலங்கைக்குப் பறந்த பூஜா, அங்கு சிங்களத்தில் 2 படங்களில் நடித்து முடித்தார்.இப்படங்கள் இலங்கையில் ஹிட் ஆகி விட்டதால், பூஜாவுக்கு இலங்கையிலும் நல்ல ரசிகர் கூட்டமாம்.

2வது சிங்களப் படத்தை முடித்து விட்டு சென்னைக்குத் திரும்பிய பூஜா, ஓரம்போ படத்தை முடித்துக்கொடுத்துள்ளார். இதில் பூஜா ஒரு பாடலில் கிளாமரில் கிடுகிடுக்க வைத்துள்ளாராம்.

அடுத்து அவர் மலையாளப் படம் ஒன்றில் திறமை காட்டவுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவதுசித்திதரம் பேசுதடி, நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூட நாயகன் நரேன்.

பூஜா நடிக்கும் முதல் மலையாளப் படம் இதுதான். படத்திற்கு இன்னும் பேர் சூட்டவில்லை. படத்தைத் தயாரிக்கப்போவது லால். இவர் சண்டக்கோழி, ஆழ்வார் படங்களில் வில்லனாக நடித்தவர்.

பள்ளிக்கூடத்தில் தங்கர் பச்சான், சீமான் ஆகியோருடன் இன்னொரு ஹீரோவாக நடிக்கும் நரேன்,மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ஒரே கடல் என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடிபோடுகிறார் மீரா ஜாஸ்மின்.

தமிழ் தவிர பிற தென்னிந்திய மொழிகளிலும் நிறைய நடிக்க வேண்டும் என ஆர்வமாக இருக்கிறார் பூஜா.

தனது ஒவ்வொரு பட சம்பளத்திலும் ஒரு பகுதியை ஏதாவது தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாகஅளிக்கும் பழக்கம் பூஜாவுக்கு இருக்கிறது என்பது பழைய சேதி. விரைவில் அவர் சமூக சேவையில் தீவிரமாகஈடுபடப்போகிறாராம். கூடவே நடிப்பையும் தொடருவாராம்.

இன்னொரு தெரசா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil