»   »  தூக்கப்பட்ட பூஜா!

தூக்கப்பட்ட பூஜா!

Subscribe to Oneindia Tamil

பூஜாவுக்கு நேரம் சரியில்லையோ என்னவே, புக் ஆன 2படங்களிலிருந்து அவரைதூக்கி விட்டார்கள்.

தம்பி படம் பூஜாவுக்கு பெரிய பிரேக்கைக் கொடுத்தது. இதன் பிறகு பல புதுப்படங்கள் பூஜாவைத்தேடி வந்தபோதிலும் மிகவும் செலக்டிவ்வாக சில படங்களைமட்டுமே ஒத்துக்கொண்டார் பூஜா.

அந்தப் படத்தில் ஒன்றுதான் நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய். தமிழ் சினிமாவில்ஒரு வழக்கம். ஏதாவது ஒரு பாட்டு பிரபலமாகி விட்டால்,அதன் முதல்வரியைவைத்து படத்தை எடுத்து விடுவார்கள்.

அப்படித்தான் டிஷ்யூம் படத்தில் பிரபலமான நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்படத்தின் முதல் வரியை வைத்து எஸ்.ஏ.சந்திரசேகரன் ஒரு படத்தைத் தயாரிக்கிறார்.இதில் சித்திரம் பேசுதடி நரேன்தான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக நடிக்க பூஜாவை புக்செய்தார் சந்திரசேகரன்.

அட்வான்ஸ் கூட கொடுத்து விட்டாராம். ஆனால் இடையில் என்ன நடந்ததோதெரியவில்லை, இப்போது படத்தில் பூஜா இல்லையாம். அவருக்குப் பதில் கடந்தஆண்டு மிஸ் ஆந்திரா பட்டம் பெற்ற பூனம் கெளர் நடிக்கிறாராம்.இதேபோல, மலையாளத்தில் டான் என்ற பெயரில் உருவாகும் படத்தில் திலீப்புடன்பூஜா நடிப்பதாக இருந்தது.

படத்தின் முதல் நாளன்று அத்தனை பேரும் ஸ்பாட்டில் ஆஜராகிவிட்டார்கள். ஆனால்பூஜாவை மட்டும் காணவில்லை. விசாரித்த போது சிங்களப் படம் ஒன்றில்நடிப்பதற்காக சிலோன் போய் விட்டார் என்று தகவல் கிடைத்தது. கடுப்பாகிப் போனடான் தயாரிப்பாளர், அவருக்காக காத்துக் கொண்டிருக்க முடியாது என்று கூறிபூஜாவை நீக்கி விட்டு கோபிகாவை புக் செய்துவிட்டார்.

இப்போது பூஜா இருக்க வேண்டிய இடத்தில் கோபிகா நடித்துக் கொண்டிருக்கிறார்.பூஜாவுக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி அசட்டையாக நடந்துகொள்கிறார் என்றுகோலிவுட்டில் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர். ஒரு வேளை எங்காவது எசகுபிசகாகசிக்கிக் கொண்டு விட்டாரோ?

Read more about: pooja removed from 2 movies
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil