For Daily Alerts
Don't Miss!
- News திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்.. 2 பேர் பலி.. ஹை டென்ஷன்
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எடியூரப்பா கட்சிக்குத் தாவும் கன்னட நடிகைகள்: பூஜா காந்தி முதல் என்ட்ரி
Heroines
oi-Jaya
By Mayura Akilan
|
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் முக்கிய கட்சிகளில் உள்ள கன்னட நடிகைகள் எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலாவதாக தேவ கவுடாவின், மதசார்பற்ற ஜனதா தளத்திலிருந்து (ம.ஜ.த) விலகியுள்ள நடிகை பூஜா காந்தி, நாளை எதியூரப்பா கட்சியில் இணைய உள்ளார்.
கன்னட சினிமா உலகின் கவர்ச்சி நடிகையான பூஜா காந்தி சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் குமாரசாமி முன்னிலையில், ம.ஜ.தவில் இணைந்தார். எனினும் பூஜா காந்தி நடித்த "தண்டுபாளையா' படம் பற்றி கட்சித் தலைவர் குமாரசாமி விமர்சித்திருந்தார். இதனால், கோபமடைந்த பூஜா காந்தி, ம.ஜ.தவிலிருந்து சமீபத்தில் விலகினார்.இந்நிலையில், எடியூரப்பாவின் புதிய கட்சியான, க.ஜ.கவில் (கே.ஜே.பி) இணைய, பூஜா காந்தி முடிவு செய்தார். இதற்காக, எடியூரப்பாவை வெள்ளிக்கிழமையன்று சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். பூஜா காந்தியின் அதிகாரப்பூர்வ இணைப்பு டிசம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று க.ஜ.த. கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேபோல் பா.ஜகவில் அதிருப்தியில் உள்ள நடிகைகள் ஸ்ருதி, மாலாஸ்ரீ ஆகியோரும், கே.ஜே.பியில் இணைய நேரம் பார்த்து காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Former chief minister B S Yeddyurappa's Karnataka Janata Party (KJP) got its first glamour quotient on Friday with cine actor Pooja Gandhi joining the party after quitting the JD(S).
Story first published: Saturday, December 8, 2012, 11:51 [IST]
Other articles published on Dec 8, 2012