மாலத்தீவா பிகினி தீவா… மாலத்தீவில் மையம் கொண்டிருக்கும் இரண்டு நடிகைகள் !

சென்னை : மாலத்தீவு என்றால தற்போது பிகினித் தீவாக மாறிவிட்டது. மாலத்தீவின் அழகை ரசிக்கிறார்களோ இல்லையோ மறக்காமல் பிகினி புகைப்படத்தை பகிர்ந்து விடுகிறார்கள்.

தற்போது,மாலத்தீவில் ஓய்வெடுத்து வரும் பூஜா ஹெக்டே, அங்கு பிகினியில் உடையில் விதவிதமான புகைப்படத்தை பகிர்ந்து இணையத்தை திணறடித்து வருகிறார்.

அதேபோல,குடும்பத்துடன் மாலத்தீவுக்கு திடீர் விசிட் அடித்துள்ள ஐஸ்வர்யா ராய் பல புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

பூஜா

பூஜா

மயக்கும் அழகுடைய பூஜா ஹெக்டே இந்திய திரையுலகில் மிகவும் விரும்பக்கூடிய முன்னணி நடிகையாக மாறி உள்ளார். கடந்த வாரம், கனமழை மற்றும் வெள்ளத்திற்கு மத்தியில் சென்னையில் தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார்.

மாலத்தீவில்

மாலத்தீவில்

விடுமுறைக்கு மாலத்தீவுக்குச் சென்றுள்ள நடிகை பூஜா, பிகினியில் தண்ணீருக்கு நடுவே நின்று கொண்டு, கையில் ஜூசை வைத்துக்கொண்டு மயக்கும் பார்வையில் அனைவரையும் வீழ்த்தும் வகையில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படத்திற்கு "அசாதாரண அனுபவத்தைத் தேடும் ஒரு சாதாரண பெண்" என கேப்ஷன் போட்டு இருந்தார்.

பிகினியில்

பிகினியில்

தற்போது இவர், மெரூன் நிற பிகினியில், கைகளை தலைக்கு மேல் தூக்கி, தலைமுடி காற்றில் பறக்க சூப்பராக போஸ் கொடுத்துள்ளார். குளிருக்கு இதமாக சூடேத்தும் வகையில் பூஜா பகிர்ந்துள்ள இந்த புகைப்படம் ஏகப்பட்ட லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

சாகோ பேபி

சாகோ பேபி

மாலத்தீவில் இருந்து பிகினியில் இவர் பதிவிட்ட இரு படங்களும் மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களை பஞ்சராக்கி உள்ளது. அப்படத்திற்கு தலைப்பாக "பிஸ்கட் கேரமல் சாக்லேட்டில் மூடப்பட்டுள்ளது.. பேசிக்கலி நான் ட்விக்ஸ் பார்? #chocobaby #beachescape." என அழகான வரிகளை எழுதியுள்ளார்.

பிரபாஸுக்கு ஜோடியாக

பிரபாஸுக்கு ஜோடியாக

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிந்த நிலையில், பொங்களுக்கு இத்திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும், விஜய்யுடன் பீஸ்ட் படத்திலும், சிரஞ்சீவியின் ஆச்சார்யா திரைப்படத்திலும், ரன்வீர் சிங்கின் சர்க்கஸ் மற்றும் சல்மான் கானின் பைஜான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

Recommended Video

Actor Natty உடன் இணையும் Karthik Raja | New movie pooja | Filmibeat Tamil
ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

அதேபோல, உலக அழகி ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகள் மற்றும் கணவருடன் மாலத்தீவுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். அங்கே இருந்தபடி மாலத்தீவில் அழகை ரசித்து கொண்டு இவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X