சர்வதேச ரசிகர்களையே சாச்சிப்புட்ட ராஷ்மிகா, பூஜா ஹெக்டே.. இந்த ஆண்டின் டாப் 10 இளம் கனவுக்கன்னிகள்!

சென்னை: இந்தியளவில் எல்லாம் இல்லை இண்டர்நேஷனல் அளவிலேயே இந்த ஆண்டு ஏகப்பட்ட ரசிகர்களை வசீகரித்த நடிகைகளின் டாப் 10 பட்டியலில் ராஷ்மிகா மந்தனா மற்றும் பூஜா ஹெக்டே இடம்பிடித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் இருவரும் அதிக ஃபாலோயர்கள், லைக்குகள் மற்றும் ஹார்ட்டின்களை அள்ளி சர்வதேச ரசிகர்களையும் கவர்ந்துள்ளனர்.

ராஷ்மிகா மந்தனா மற்றும் பூஜா ஹெக்டேவை தொடர்ந்து இந்த பட்டியலில் பாலிவுட் நடிகை சாரா அலி கானும் இடம்பிடித்துள்ளார்.

முதலிடத்தில் செலினா

முதலிடத்தில் செலினா

உலகளவில் 364 மில்லியன் ரசிகர்களை கொண்ட இளம் நடிகையும் பாடகியுமான செலினா கோமஸ் இந்த 2022ம் ஆண்டு இளைஞர்களை அதிகம் கவர்ந்த இளம் நடிகை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். ஏகப்பட்ட சர்வதேச மீடியாக்கள் வெளியிட்டுள்ள லிஸ்ட்டில் செலினா கோமஸ் இடம் பிடித்துள்ளார். சிறு வயது முதலே செலினா கோமஸ் பாடகியாக கலக்கிய நிலையில், லேட்டஸ்ட்டாக நடிப்பிலும் அசத்தி வருகிறார்.

2. கேமிலா மெண்டஸ்

2. கேமிலா மெண்டஸ்

இளம் ஹாலிவுட் நடிகையான கேமிலா மெண்டஸ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான டு ரிவெஞ்ச் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அவரது நடிப்பையும் அழகையும் வெகுவாக கடத்தி சென்றது. 2017ல் வெளியான ரிவர்டேல் படத்தில் இருந்தே கேமிலா மெண்டஸ் சர்வதேச ரசிகர்களின் கனவுக் கன்னியாக மாறி உள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆடையின்றி அவர் வெளியிட்டுள்ள ஹாட் பிக்ஸ் எல்லாம் ஏகப்பட்ட லைக்குகளை அள்ளி உள்ளது.

3. ராஷ்மிகா மந்தனா

3. ராஷ்மிகா மந்தனா

சர்வதேச அளவில் டாப் 10 கனவுக் கன்னிகள் பட்டியலில் நடிகை ராஷ்மிகா மந்தனா 3வது இடத்தை பிடித்துள்ளார். 35.6 மில்லியன் ரசிகர்களுடன் தென்னிந்தியாவிலேயே அதிக இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை பெற்ற நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. புஷ்பா படத்தின் ரீச், அமிதாப் பச்சன் படத்தில் நடித்தது. சீதா ராமம் படத்தில் முக்கிய கதாபாத்திரம், அடுத்து விஜய்யின் வாரிசு, புஷ்பா 2 என ரவுண்டு கட்டி அசத்தி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இதற்கிடையே கன்னட திரையுலக சர்ச்சை வேறு அவரை பற்றி அதிகம் பேச வைத்தது.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

இந்த பட்டியலில் 4வது இடத்தில் ஹாலிவுட் நடிகை ஜெண்டாயாவும் 5வது இடத்தில் நடிகை பூஜா ஹெக்டேவும் உள்ளனர். இந்த ஆண்டு ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா மற்றும் F3 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் பூஜா ஹெக்டே. விரைவில் வெளியாக உள்ள ரன்வீர் சிங்கின் சர்கஸ் படத்திலும் பூஜா ஹெக்டே தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் இவர் நடனமாடிய அரபிக் குத்து பாடல் சர்வதேச அளவில் இவருக்கு ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.

அனன்யா பாண்டே, சாரா அலி கான்

அனன்யா பாண்டே, சாரா அலி கான்

டவ் ஒலிவியா, மேடலைன் பெட்ச், விக்டோரியா ஜஸ்டிஸ் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள நிலையில், பாலிவுட் நடிகைகள் அனன்யா பாண்டே மற்றும் சாரா அலி கான் இருவரும் தலா 7வது இடம் மற்றும் 10வது இடத்தை பிடித்துள்ளனர். அனன்யா பாண்டே நடிப்பில் இந்த ஆண்டு கெஹ்ரியான் மற்றும் லைகர் படங்கள் வெளியாகின. சாரா அலி கான் தனுஷ், அக்‌ஷய் குமார் நடித்த அட்ரங்கி ரே படத்தில் நடித்திருந்தார்.

ஜான்வி கபூருக்கு இடமில்லை

ஜான்வி கபூருக்கு இடமில்லை

2022ம் ஆண்டு இணையத்தை சூடாக்கிய இளம் நடிகைகள் லிஸ்ட்டில் நடிகை ஜான்வி கபூர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தாலும், திரைப்படங்களில் இந்த ஆண்டு பெரிதளவில் ஜான்வி கபூர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தவில்லை என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X