மறக்க முடியுமா.. 2020ல் ஹீரோக்களின் ரசிகர்களுக்கு இணையாக நடந்த சமந்தா, பூஜா ரசிகர்கள் சண்டை!

ஹைதராபாத்: பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அதில் சமந்தா குறித்து போடப்பட்ட பதிவு இரு நடிகைகளுக்குள்ளும் சண்டையை மூட்டி விட்டது.

சமூக வலைதளத்தில் எப்போதுமே தல தளபதி ரசிகர்கள் சண்டை தான் கோலோச்சி வரும் நிலையில், அவர்களையே மிரள வைக்கும் அளவுக்கு இந்த ஆண்டு நடிகை சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே ரசிகர்கள் இடையே மிகப்பெரிய சண்டை நடைபெற்றதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.

#PoojaMustApologizeSamantha என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு சமந்தா ரசிகர்களும், #WeSupportPoojaHegde என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து பூஜா ஹெக்டே ரசிகர்களும் சண்டை போட்டு இந்தியளவில் மிரட்டினர்.

ஹேக் செய்யப்பட்டதா?

ஹேக் செய்யப்பட்டதா?

நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராமில் நடிகை சமந்தா போட்டோவை பதிவிட்டு, 'அப்படியொன்னும் அழகு இல்லையே?' என்று கிண்டலாக போடப்பட்ட பதிவு தான் அத்தனைக்கும் காரணம். முன்னதாக தனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது என சொன்ன பூஜா ஹெக்டேவின் கணக்கில் இருந்து இப்படி ஒரு போஸ்ட் வர ரசிகர்கள் சண்டை ஆரம்பமானது. ஆனால், அவருடைய கணக்கு ஹேக் செய்யப்படவில்லை என சமந்தா ரசிகர்கள் வாதிட்டனர்.

அம்பலமான ரகசிய சாட்

அம்பலமான ரகசிய சாட்

நடிகை சமந்தா, நந்தினி ரெட்டி மற்றும் சின்மயி உள்ளிட்ட பிரபலங்களுக்கு நடுவே, எப்படி ஹேக் ஆகிடுச்சுன்னு பொய் சொல்லி அந்த பூஜா ஹெக்டே இப்படியொரு வேலை செய்திருக்கிறாள் பாருங்க, என பேசிக் கொள்ளும் ரகசிய சாட் ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைதளத்தில் வைரலாக, பூஜா ஹெக்டே ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக களத்தில் குதித்தனர். ஆனால், அந்த சாட் குறித்த உண்மைத் தன்மையும் தெரியவில்லை.

இந்தியளவில் டிரெண்டான சண்டை

இந்தியளவில் டிரெண்டான சண்டை

இப்படி நடிகைகள் அவர்களது அதிகாரப்பூர்வ ஐடிக்களில் சாட் செய்தது போல ஃபேக்காக பரவிய ஸ்க்ரீன் ஷாட்களை வைத்துக் கொண்டு #WeSupportPoojaHegde என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி சமந்தா ரசிகர்கள் போட்ட சண்டைக்கு நிகராக பூஜா ஹெக்டேவின் ரசிகர்களும், சமந்தா, சின்மயி உள்ளிட்ட பிரபலங்களை விளாசித் தள்ளி வருகின்றனர்.

யார் டாப்

சமந்தா அழகு இல்லை என பூஜா ஹெக்டே எப்படி அப்படி ஒரு போஸ்ட்டை போடுவார் என்றும், பூஜா ஹெக்டே தான் உண்மையான அழகி, சமந்தா பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தான் இப்படி மாறியுள்ளார் என்றும் ரசிகர்களின் சண்டை எல்லை மீறி போய் கொண்டிருக்கிறது. மகேஷ் பாபு, பிரபாஸ், அல்லு அர்ஜுன் ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த நடிகைகளுக்கு சப்போர்ட் செய்தனர்.

இரு கால்களை தூக்கி

இரு கால்களை தூக்கி

சமந்தாவை விட சீக்கிரமாக 11 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை சேர்த்துவிட்டேன் என தம்பட்டம் அடிக்கும் விதமாக நடிகை பூஜா ஹெக்டே தனது இரண்டு கால்களையும் தலைக்கு மேலே தூக்கி 11 என காட்டி சமந்தாவையும் அவரது ரசிகர்களையும் ரொம்பவே கடுப்பேற்றினார்.

12 மில்லியன்

12 மில்லியன்

உடனே இன்ஸ்டாகிராம் களத்தில் குதித்த நடிகை சமந்தா யோகா போஸ், கிளாமர் போட்டோஸ் என அடுத்தடுத்த அட்டாக்குகளை சமூக வலைதளங்களில் கொடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பின்னால் இழுத்து 11 மில்லியனை தாண்டி, அதி சீக்கிரமாக பூஜா ஹெக்டேவை விட முன்னதாக 12 மில்லியன் ஃபாலோயர்களை அடைந்தார். ஆனால், இதுவரையிலும் அவர்களது கோல்ட் வார் அப்படியே கோல்ட் வாராகவே தொடர்வது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X