twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொண்டாரெட்டி கோட்டையில் மகேஷ் பாபுவுடன் குத்தாட்டம் போடும் பூஜா ஹெக்டே

    |

    சென்னை: சரிலேறு நீக்கேவரு திரைப்படத்திற்காக வரலாற்று சிறப்பு வாய்ந்த கொண்டா ரெட்டி கோட்டையின் செட் ஒன்றை அமைத்துள்ளனர். இப்படத்தில் ஒரு ஸ்பெஷல் பாடலுக்கு பால்வண்ண அழகி தமன்னா உடன் மிகவும் உற்சாகமாக நடனமாடியுள்ளார் மகேஷ் பாபு. தற்போது இந்த படத்தில் இடம்பெறும் மற்றொரு சிறப்பு பாடலுக்காக நடிகை பூஜா ஹெக்டே நடிகை மகேஷ் பாபுவுடன் இணைந்து ஆடப்போவதாக படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

    அனில் ரவிப்புடி இயக்கத்தில் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து கொண்டிருக்கும் அடுத்த என்டர்டெய்ன்மென்ட் திரைப்படம் சரிலேரு நீக்கேவரு.

    Pooja Hegde dance with Mahesh Babu in Sarileru Neekewaru Movie

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆர்மி மேஜராக நடிக்கும் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் இவர்கள் இருவரும் இணைந்து ரொமான்ஸ் செய்கிறார்கள் என்பது ஊர் அறிந்த செய்தி.

    பல சர்ப்ரைஸ்களை அடுத்தடுத்து கொடுத்து வருகிறார் படத்தின் இயக்குனர் அனில் ரவிப்புடி. படத்தின் முக்கியமான காட்சிகள் காஷ்மீரின் அழகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன. மேலும் ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் ஆடம்பரமான செட்கள் அமைக்கப்பட்டு படத்தின் பாடல் காட்சிகளும் சண்டை காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன.

    வரலாற்று சிறப்பு வாய்ந்த கொண்டா ரெட்டி கோட்டையின் செட் ஒன்றை அமைத்துள்ளனர். இப்படத்தில் ஒரு ஸ்பெஷல் பாடலுக்கு பால் வண்ண அழகி தமன்னா உடன் மிகவும் உற்சாகமாக நடனமாடியுள்ளார் மகேஷ் பாபு.

    இந்த கொண்டா ரெட்டி கோட்டை செட்டில் தான் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒக்கடு திரைப்படத்தில் இடம்பெற்ற க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. அந்த படம் மாபெரும் வெற்றி பெற்று மகேஷ் பாபு தெலுங்கு படவுலகின் முன்னணி நாயகனாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த சர்ப்ரைஸில் இருந்து மீள்வதற்கு முன்னரே மற்றுமொரு சுவாரஸ்யமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் சரிலேரு நீக்கேவரு திரைப்படத்தின் தயாரிப்பாளர். மற்றுமொரு சிறப்பு பாடலுக்காக மகேஷ் பாபுவுடன் கைகோர்க்கவுள்ளார் பூஜா ஹெக்டே.

    இவர்கள் இருவரும் ஏற்கனவே ஜோடி சேர்ந்து மகரிஷி படத்தில் வருண் தேஜின் கடலகொண்ட கணேஷ் எனும் பாடலில் நடனமாடியுள்ளனர். பூஜா ஹெக்டே பிரபாஸுடன் இணைந்து ஜான் திரைப்படத்திலும் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ஆல வைகுந்தபுரம்லு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

    English summary
    The set of the historic Konda Reddy Castle is set for the movie 'Sarileru Neekewaru'. Mahesh Babu is dancing with Tamanna for a special song. The film crew has reported that actress Pooja Hegde will also team up with actress Mahesh Babu for another special song to be featured in the film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X