Don't Miss!
- Sports
ஐபிஎல்-க்கு முன் உள்ள கடைசி டி20.. 3 முக்கிய முடிவுகளை எடுக்கும் ஹர்திக்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
- Finance
ரூ50 கோடி வீடு,ஆடி கார் என பல..கே.எல்.ராகுல் அதியா ஷெட்டிக்கு குவிந்த பரிசுகளுக்கு வரி செலுத்தணுமா?
- News
"அது வேற வாய்!" ஷாருக்கின் பதான் படத்திற்கு தடை கேட்டு கொந்தளித்த பாஜக அமைச்சர்! இப்போ என்ன சொன்னார்
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
கவர்ச்சி கை கொடுக்கவில்லை.. ஆக்ஷனில் களமிறங்கிய பூஜா ஹெக்டே.. யாரு கூட தெரியுமா ?
சென்னை : தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் பூஜா ஹெக்டே.
தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் படவாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த பூஜா ஹெக்டேவுக்கு தமிழில் படங்கள் ஒப்பந்தம் ஆகாததால் ஏமாற்றம் அடைந்தார்.
இதையடுத்து, மீண்டும் டோலிவுட்டுக்கு சென்ற பூஜா ஹெக்டே, அதிரடி ஆக்ஷ்ன் நாயகியாக களமிறங்கி உள்ளார்.
ஐஸ்வர்யா
ராய்,
தீபிகா
படுகோன்,
பூஜா
ஹெக்டே..
களைகட்டும்
கான்ஸ்
திரைப்பட
விழா..
ரசிகர்கள்
மகிழ்ச்சி!

பூஜா ஹெக்டே
மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பூஜா ஹெக்டே. அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால், தெலுங்கு பக்கம் தனது கவனத்தை திருப்பினார். அல்லு அர்ஜுனின் அசத்தல் நடிப்பில் வெளிவந்த அல வைக்குந்தாபுராமுலு என்ற படத்தில் நடித்தார். மேலும், அப்படத்தில் இடம் பெற்ற புட்ட பொம்மா என்ற பாடல் சோசியல் மீடியாவில் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

தொடர்ந்து படங்கள் தோல்வி
இதையடுத்து தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து டாப் நடிகை என்று பெயர் எடுத்த பூஜா ஹெக்டே தற்போது தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். ராம் சரணுக்கு ஜோடியாக நடித்த ஆச்சார்யா திரைப்படமும், பிரபாஸுக்கு ஜோடியாக நடித்த ராதேஷ்யாம் திரைப்படமும் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை.

ஆக்ஷன் நாயகி
இதையடுத்து, சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரித்து வரும் ஜன கன மன என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி உள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில், பூஜாவுக்கு மிரட்டலான ஒரு ஆக்ஷன் காட்சி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அக்ஷன் காட்சிக்காக தற்போது ஒரு வெளிநாட்டு பயிற்சியாளரிடம் தீவிர ஆக்ஷன் பயிற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

பான் இந்திய படம்
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. சார்மி கவுர், ஸ்ரீகாரா ஸ்டுடியோ தயாரிப்பாளர் வம்ஷி பைடிப்பள்ளி, ஸ்ரீகாரா ஸ்டுடியோவின் இயக்குநர் சிங்கராவ் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.