அந்த நடிகரை காதலிக்கும் பூஜா ஹெக்டே.. செமயாக சுத்துறாங்களாம்.. உண்மையாக இருக்குமோ?

சென்னை: தமிழ் சினிமாவில் இப்போது டாப் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பூஜா ஹெக்டே. இதுவரை அவர் தமிழில் நடித்திருக்கும் முகமூடி, பீஸ்ட், ரெட்ரோ உள்ளிட்ட படங்கள் எல்லாம் தோல்வியைத்தான் சந்தித்தன. இருப்பினும் பெரிய பட வாய்ப்புகள் அவருக்கு செல்கின்றன. அடுத்ததாககூட விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்திருக்கும் ஜனநாயகன் படம் வரவிருக்கிறது. இந்நிலையில் பூஜா ஹெக்டே ஒரு நடிகரை தீவிரமாக காதலித்துவருவதாக பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன.

ஜீவாவை ஹீரோவாக வைத்து மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. முதல் படம் சூப்பர் ஹிட்டாகி தமிழில் தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கும் என்றுதான் நினைத்திருந்தார். ஆனால் அந்தப் படம் மோசமான தோல்வியைத்தான் சந்தித்தது. முதல் படமே அவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்ததால் கோலிவுட்டில் பூஜாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து பாலிவுட்டிலும், டோலிவுட்டிலும் அவர் கவனத்தை செலுத்த; அங்கே பிஸியானார்.

Pooja Hegde in Love Actress Reportedly Dating Rohan Mehra Marriage Soon
Photo Credit:

தமிழில் ரீ என்ட்ரி: ஒருகட்டத்தில் அவர் கோலிவுட்டையே மறந்துதான் இருந்தார். அப்படிப்பட்ட நிலைமையில்தான் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடிக்க வைத்தார் நெல்சன். ரீ என்ட்ரியில் முதல் படமே பெரிய ஸ்டாரோடு நடித்ததால் இது கண்டிப்பாக கைகொடுக்கும் என்றுதான் நம்பினார். ஆனால் அப்படமும் தோல்வியை சந்தித்து; ட்ரோலுக்கும் உள்ளானது. எனவே இனிமேலும் கோலிவுட்டில் தாக்கு பிடிக்க முடியாது என்றுதான் அவரே நினைத்தார். இருப்பினும் பூஜாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.

பெரிய ஹீரோக்கள் படங்கள்தான்: அந்த வாய்ப்புகளும் சாதாரண வாய்ப்புகள் இல்லை. பெரிய ஹீரோக்களோடு நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அந்தவகையில் சூர்யாவுக்கு ஜோடியாக ரெட்ரோ படத்தில் நடித்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த அந்தப் படம் கடந்த வருடம் வெளியாகி தோல்வியை சந்தித்தது. இப்படி பூஜா எந்தப் படத்தில் நடித்தாலும் பெரிய ஹிட் எதுவும் கிடைப்பதில்லை. ஆனாலும் அவருக்கான மார்க்கெட் இன்னமும் அப்படியே இருப்பதை பார்த்து அனைவருமே ஆச்சரியம்தான் படுகிறார்கள்.

ஜனநாயகன் படத்தில் பூஜா: அடுத்ததாக அவரது நடிப்பில் ஜனநாயகன் படம் வரவிருக்கிறது. அதில் அவர் பத்திரிகையாளராக நடித்திருக்கிறார். ஜனவரி மாதமே வந்திருக்க வேண்டிய அந்தப் படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் தள்ளிப்போனது. இன்னமும் அப்படத்துக்கு சான்றிதழ் கிடைத்தபாடில்லை. சமீபத்தில்கூட முழு படமும் இணையத்தில் லீக்காகி பெரிய அதிர்ச்சியை கிளப்பியது. பூஜா ஹெக்டேவும் ரொம்பவே ஃபீல் செய்திருந்தார். இந்நிலையில் பூஜா பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

காதலில் பூஜா ஹெக்டே?: அதாவது அவர் தமிழில் நடித்தாலும் பெரும்பாலும் அவர் வசிப்பது மும்பையில்தான். சூழல் இப்படி இருக்க அவரும் நடிகர் ரோஹன் மெஹ்ராவும் காதலித்துவருவதாகவும்; மும்பையிலும், வெளிநாட்டிலும் அடிக்கடி சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. ஏற்கனவே நடிகை ரியா ஷர்மாவை காதலித்தார் ரோஹன். அவருடனான ரிலேஷன்ஷிப்பை பிரேக் அப் செய்துவிட்டு இப்போது பூஜாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும்; திருமணம் செய்துகொள்ளும் ஐடியாவில் அவர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X