விஜய் 69க்கு பிறகு பூஜா ஹெக்டே பிளான் இதானாம்.. அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய வெப் தொடர் தெரியுமா?

சென்னை: முகமூடி, பீஸ்ட் படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பூஜா ஹெக்டே. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் அவர், இப்படத்தில் அவர் வாய் பேசமுடியாத ஊமை பெண்ணாக நடித்துள்ளார். இதையடுத்து விஜய்யுடன் ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகிறார். தற்போது அவர் அஜய் ஞானமுத்து இயக்கும் வெப் தொடர் ஒன்றில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரபிக்குத்து டான்ஸ்: அலா வைகுந்தபுரமுலோ படத்திற்கு பிறகு நடிகை பூஜா ஹெக்டேவுக்கு பல பெரிய பட வாய்ப்புகள் குவிந்தன. பிரபாஸின் ராதே ஷ்யாம், ராம் சரணுடன் ஆச்சார்யா, விஜய்யுடன் பீஸ்ட், சல்மான் கானுடன் கிஸி கா பாய் கிஸி கி ஜான் என அவர் நடித்த 4 பெரிய படங்கள் தோல்வியைத் தழுவின. பீஸ்ட் படத்தில் அரபிக்குத்து பாட்டிற்கு பூஜா ஹெக்டேவின் சின்ன மூமண்ட் ரசிக்கும் படி இருந்தது. பார்த்து விஜய் மட்டும் அல்ல ரசிகர்களும் சொக்கி தவித்தனர். இப்பாட்டு மிகப்பெரிய ஹிட் அடித்தாலும், படம் அட்டர் பிளாப் ஆனது. அதன் காரணமாக மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன.

Pooja Hegde Web series Ajay Gnanamuthu

ஷாகித் கபூருடன் ரொமான்ஸ்: இந்த ஆண்டு ஆரம்பமே ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் ஷாகித் கபூருடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்த தேவா படத்தை பார்த்த ரசிகர்கள் படத்திற்கு பயங்கரமான பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்தனர். 2024இல் இந்தி படங்கள் பெரும்பாலும் சொதப்பி வந்த நிலையில், பாலிவுட்டுக்கும் நல்ல வெற்றிப் படமாக தேவா இருந்தது. இந்நிலையில், தேவா படத்தில் ஷாகித் கபூருடன் இருக்கும் நெருக்கமான முத்தக் காட்சிகள் பெரும் சர்ச்சையை வெடித்தது. சென்சார் போர்டே திகைத்து போகும் அளவிற்கு ரொமான்ஸ் காட்சிகள் இருந்துள்ளன.

பூஜா ஹெக்டே நடிகர் ஷாகித் கபூருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து நடித்த சீனை ரசிகர்கள் தியேட்டரில் இருந்தே வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் தீயாக பரப்பினர். இந்த காட்சியை பார்க்கவே சிலர் தியேட்டருக்கு படையெடுத்தனர்.

Pooja Hegde Web series Ajay Gnanamuthu

வெப் தொடர்: டிமாண்டி படத்தின் மூலம் வெற்றி இயக்குநராக அறிமுகம் ஆனவர் அஜய் ஞானமுத்து. விக்ரமை வைத்து இயக்கிய கோப்ரா படம் தோல்வியடைந்தது. பின்னர், டிமாண்டி 2 படத்தின் மூலம் தோல்வி சரிவில் இருந்து மீண்டார். தற்போது நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் புதிய வெப்தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். இதில், பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இளைஞர்களின் மனதை கவர்ந்த இளம் நடிகை என்றாலும் பெரும் வெற்றிக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

சமந்தா தமன்னா பாணி: நடிகை சமந்தா தெலுங்கு, தமிழ் மொழிகளில் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தபோதே ஃபேமிலி மேன் வெப் தொடர் மூலம் சமந்தா புதிய அவதாரத்தை தொடங்கினார். ஃபேமிலி மேன் படத்தில் இடம்பெற்ற ஆபாச காட்சிகளும் பெரும் சர்ச்சையை வெடித்தன. சமந்தாவின் நடிப்பும் பாராட்டை பெற்றது. பின்னர் சிட்டாடல் என்ற வெப் தொடரில் வருண்தவானுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், அது பெரியளவில் வரவேற்பை பெறவில்லை. ஃபேமிலி மேன் 2 நடித்து முடித்துள்ளார். அதேபோன்று தமன்னாவும் ஜீ கர்தா, லவ் ஸ்டோரிஸ் ஆகிய தொடர்களில் நடித்தார். அதேபோன்று தற்போது பூஜா ஹெக்டேவும் வெப் தொடரில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

2025 ஆண்டு அவருக்கு மிகப்பெரும் வெற்றியை தரும் சிறந்த ஆண்டாக அமையும் எனலாம். விஜய், சூர்யா என டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X