பதில் சொல்ல நான் ரெடி... கேள்வி கேட்க நீங்க ரெடியா? ட்விட்டர் லைவ் சாட்டில் பூஜா ஹெக்டே!

சென்னை : நடிகர் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. இந்தப் படத்தில் பாடல்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவற்றில் இவரது சிறப்பான பங்களிப்பு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. நடன அசைவுகளில் விஜய்க்கு ஈடுகொடுத்து இவர் நடித்துள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமுடி படத்திற்கு பிறகு, தெலுங்கு, இந்தி என தன்னை பிசியான நடிகையாக மாற்றிக் கொண்டார். அதன்பிறகு இவரை தமிழில் பார்க்க முடியவில்லை. தெலுங்கு படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் பூஜா ஹெக்டே தற்போது தமிழுக்கு சிறப்பான என்ட்ரியை கொடுத்துள்ளார்.

பூஜாவின் பங்களிப்பு

பூஜாவின் பங்களிப்பு

தற்போது விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் பூஜா ஹெக்டே. இந்தப் படத்தின் பாடல்கள், ட்ரெயிலர், ப்ரமோக்கள் உள்ளிட்டவற்றை சன் பிக்சர்ஸ் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இவற்றின் மூலம் படத்தில் பூஜா ஹெக்டேவின் பங்களிப்பு சிறப்பாக வெளிப்பட்டு வருகிறது.

20 நாட்கள் ஒரே காஸ்ட்யூம்

20 நாட்கள் ஒரே காஸ்ட்யூம்

படத்தில் மாலில் பொதுமக்கள் படத்தப்படும் சம்பவத்தை கதைக்களமாக கொண்டுள்ளார் நெல்சன் திலீப்குமார். இதையொட்டி சமீபத்தில் பூஜா ஹெக்டே கொடுத்துள்ள பேட்டியில் தொடர்ந்து 20 நாட்கள் ஒரே காஸ்ட்யூமில் யூனிட்டில் அனைவரும் இருந்ததாக அப்டேட் தெரிவித்துள்ளார்.

சிறப்பான பிரமோஷன்

சிறப்பான பிரமோஷன்

பீஸ்ட் படம் இந்திய அளவில் 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி அனைத்து மொழிகளிலும் பூஜா ஹெக்டே தொடர்ந்து பிரமோஷன்களில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் தெலுங்கில் பீஸ்ட் படத்தின் ரிலீசையொட்டி நடந்த பிரீ ரிலீஸ் நிகழ்விலும் இவர் கலந்து கொண்டார். இதில் நெல்சனுடன் இணைந்து பேட்டியும் கொடுத்திருந்தார்.

ட்விட்டரில் லைவ் சாட்

ட்விட்டரில் லைவ் சாட்

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் பிரமோஷனையொட்டி, ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு லைவாக பதில் சொல்லவுள்ளதாக பூஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தன்னிடம் ரசிகர்கள் கேள்விகளை அடுக்கலாம் என்று அவர் வீடியோ மூலம் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

என்னோட 1st movie க்கு song எழுதியது கார்க்கி சார் தான் | பூஜா ஹெக்டே ராதே ஷ்யாம்
ரசிகர்களுடன் பேசும் பூஜா

ரசிகர்களுடன் பேசும் பூஜா

ஏற்கனவே படம் குறித்த பல விஷயங்களை தொடர்ந்து ஷேர் செய்து வருகிறார் பூஜா ஹெக்டே. இந்நிலையில் லைவிலும் ரசிகர்களிடம் உரையாட உள்ளது ரசிகர்களுக்கு சிறப்பான செய்தியாக இருக்கும். 5 மணிக்கு நடைபெறவுள்ள இந்த சாட்டில் அவரிடம் ரசிகர்கள் கேள்விகளை கேட்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X