கனவு நனவான தருணம்.... பூஜா ஹெக்டே மகிழ்ச்சிப் பதிவு

மும்பை : நடிகை பூஜா ஹெக்டே சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட்டிலும் இவர் நடித்து வரும் நிலையில், தற்போது அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார்.

அமிதாப் பச்சனுடன் தான் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ள பூஜா ஹெக்டே தன்னுடைய கனவு நனவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் படம் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. அகிலுடன் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருந்தார் பூஜா.

மோஸ்ட் எலிஜிபள் பேச்சுலர் படம்

மோஸ்ட் எலிஜிபள் பேச்சுலர் படம்

இந்தப் படம் தற்போது ஆஹா ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் அகில் தனக்கான ஜோடியை தேர்ந்தெடுக்கும் கதைக்களத்தை கொண்டு இந்தப் படம் ரிலீசானது. இந்தப் படத்தையடுத்து தற்போது பிரபாசுடன் ராதே ஷ்யாம் படத்திலும் நடித்துள்ளார் பூஜா. இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

விஜய்யுடன் ஜோடி

விஜய்யுடன் ஜோடி

தமிழிலும் நடிகர் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தல் கோடைக் கொண்டாட்டமாக இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

பாலிவுட்டிலும் பூஜா ஹெக்டே

பாலிவுட்டிலும் பூஜா ஹெக்டே

தமிழ், தெலுங்கில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார் பூஜா ஹெக்டே. பாலிவுட்டில் அமிதாப் பச்சனுடன் இணைந்து தற்போது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் பூஜா.

அமிதாப்புடன் இணைந்த பூஜா

அமிதாப்புடன் இணைந்த பூஜா

அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தனது நீண்டநாள் கனவு என்றும், அது தற்போது நனவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த புகைப்படத்தை பூஜா வெளியிட்டுள்ளார்.

புகைப்படம் பகிர்வு

புகைப்படம் பகிர்வு

அதில் அமிதாப் பச்சன் மிகவும் சீரியசாகவும் பூஜா ஹெக்டே கைத்தட்டி ஆரவாரத்துடனும் காணப்படுகின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது துவங்கியுள்ளது. விரைவில் படக்குழுவினர் டைட்டிலை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X