twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மொட்டை மாடியில் ஹாய்யா குட்டி தூக்கம்.. பூஜா ஹெக்டேவின் க்யூட் பிக்ஸ்!

    |

    ஹைதராபாத் : நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து நடித்து வரும் ராதே ஷ்யாம் வரும் ஜூலை 30-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அகில் அக்கினி உடன் இணைந்து மோஸ்ட் எலிஜபிள் பேச்சுலர் படத்தில் நடித்துள்ள இவர் அந்த படம் இளமை ததும்பும் காதல் திரைப்படமாக உருவாகி உள்ளது என தெரிவித்துள்ளார்.

    தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவை தனது க்யூட்டான நடிப்பின் மூலம் கட்டிப் போட்டுள்ள நடிகை பூஜா ஹெக்டே இப்பொழுது மொட்டை மாடியில் உண்ட மயக்கத்தில் ஜிலேபி கலர் பேண்டில் படுத்து உறங்கும் க்யூட் புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது.

    ரொமாண்டிக் காதல்

    ரொமாண்டிக் காதல்

    பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் நிலையில் இப்பொழுது சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வருகிறது ராதே ஷ்யாம் படம். இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ரொமாண்டிக் காதல் படமாக உருவாகி வரும் ராதா ஷ்யாம் வரும் ஜூலை 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

    புட்டபொம்மா பாடல்

    புட்டபொம்மா பாடல்

    அலா வைகுண்டபுரம்லோ படத்திற்கு பிறகு பூஜாவின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து இப்போது பாலிவுட்டில் மவுசு கூடி போக தெலுங்கு மற்றும் இந்தி என இரு மொழிகளிலும் எக்கச்சக்கமான படங்களில் நடிப்பதில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் அலா வைகுண்டபுரம்லோ படத்தில் வரும் புட்டபொம்மா பாடல் இன்று வரை உலகம் முழுவதும் மிகப் பிரபலமாகி வைரலாகி வருகிறது.

    படுதோல்வியடைந்தது

    படுதோல்வியடைந்தது

    அசரவைக்கும் டான்ஸ், க்யூட்டான நடிப்பு, கலங்கவைக்கும் கவர்ச்சி என அனைத்தையும் கச்சிதமாக செய்து முடிக்கும் மிகச் சிறந்த நடிகையான பூஜா முதன்முதலில் தமிழில் முகமூடி திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கி இருக்க ஜீவா முதன்முறையாக சூப்பர் ஹீரோ ரோலில் நடித்திருந்தார் ஆனால் படம் படுதோல்வியடைந்தது.

    குட்டித்தூக்கம்

    குட்டித்தூக்கம்

    முதல்படமே தோல்வியை கொடுத்ததால் மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டாத இவர் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறார். காதலர் தினத்தை முன்னிட்டு ராதே ஷ்யாம் படத்திலிருந்து அழகான காட்சியை வெளியிட்டு, படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்ததை அடுத்து மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர், ஆச்சார்யா மற்றும் ரன்வீர் சிங்குடன் இணைந்து சர்க்கஸ் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு அடுத்தடுத்து ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் ஆரஞ்சு கலரில் பேண்ட் போட்டுக்கொண்டு மொட்டை மாடியில் உண்ட மயக்கத்தில் சோபாவில் ஹாயாக படுத்துக் கொண்டு தூங்கும் க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

    English summary
    Pooja Hegde latest insta post
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X