பிகினி உடையில் ஆறடி அரேபியன் குதிரை போல போஸ் கொடுக்கும் பீஸ்ட் நடிகை!
சென்னை : அலா வைகுண்டபுரம்லோ பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இப்பொழுது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.
முகமூடி படத்திற்கு பிறகு நீண்ட ஆண்டுகளாக தமிழில் நடிக்காமல் இருந்த பூஜா ஹெக்டே இப்போது விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
தமிழ் தெலுங்கு ஹிந்தி என படு பிசியாக நடித்து வரும் பூஜா இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் அரேபியன் குதிரை போல நின்று கொண்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

முதல் படம் பெரிதாக கைகொடுக்கவில்லை
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா சூப்பர் ஹீரோவாக நடித்திருந்த முகமூடி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து முதல் முறையாக நடிகை பூஜா அறிமுகம் செய்யப்பட்டார். ஆரம்பமே தமிழில் இவர் அறிமுகமாகி இருந்தாலும் முதல் திரைப்படம் இவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. மேலும் முகமூடி திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

புட்டபொம்மா பாடல் பிரபலமாக்கியது
தமிழில் நடித்த முதல் திரைப்படம் வெற்றி பெறவில்லை என்பதால் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த பூஜாவுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அலா வைகுண்டபுரம்லோ இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது இந்த திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்ததோடு இதில் இடம்பெற்ற புட்டபொம்மா பாடல் பூஜா ஹெக்டேவை உலக அளவில் பிரபலப்படுத்தியது.

பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக
அலா வைகுண்டபுரம்லோ வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் அனைவராலும் கவனிக்கக் கூடிய மிக முக்கிய நடிகையாக மாறியுள்ள பூஜா ஹெக்டே முகமூடி படத்திற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் தமிழில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வகையில் நடிகை விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

அரேபியன் குதிரை போல செம ஹாட்டாக
டார்ஜிலிங், சென்னை,ஹைதராபாத் என பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே சென்னை படப்பிடிப்பில் கலந்துகொண்டு விஜய்க்கும் பூஜாவுக்கும் இடையேயான ரொமான்டிக் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் ரிலீசுக்கு பிறகு தமிழில் பல படங்களில் பூஜா ஹெக்டே நடிப்பார் என எதிர்பார்க்கப்படும் சூழலில் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் பூஜா வெளியிடும் கவர்ச்சி புகைபடங்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு பிகினியில் தொடையழகு தொக்கா தெரிய நீளமான கோட் ஒன்றை ஒரு பக்கம் மட்டும் தொங்கவிட்டுக் கொண்டு அரேபியன் குதிரை போல செம ஹாட்டாக நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை பாடாய்படுத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications











