மணிரத்னத்திற்கு நோ சொன்ன பூஜா ஹெக்டே
மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், அதை மறுத்துவிட்டார் நடிகை பூஜா ஹெக்டே.
2010ம் ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பூஜா ஹெக்டே இரண்டாவது இடம் பிடித்தார். பின்னர் ரன்பீர் கபூருடன் விளம்பர படத்தில் பூஜா நடித்தார்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள பூஜா ஹெக்டே இப்போது பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

முகமூடி நாயகி
தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமான பூஜா ஹெக்டே, மூகமுடி ஃபிளாப் ஆனதால் தமிழில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை. தெலுங்கு படங்கள், விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தெலுங்கிலும் ஹிட்
அடுத்து 'ஒக லைலா கோசம்' என்கிற தெலுங்கு படத்தின் மூலம், நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவின் படத்தில் ஆந்திராவிலும் அறிமுகமானார்.

ஹிருத்திக் ரோஷன் நாயகி
திடீரென பூஜா மீது அதிர்ஷ்டக்காற்று வீசியிருக்கிறது. லகான், ஜோதா அக்பர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பிரபல இந்திப்பட இயக்குனர் அஷூதோஷ் இயக்கும் மொகஞ்சதோரா படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக நடிக்கிறார். யுடிவி நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

மனைவி சிபாரிசு
யதார்த்தமான இந்த காதல் கதைக்கு அடுத்த வீட்டு பெண் தோற்றம் கொண்டவரை தேடியபோது அஷூதோஷ் மனைவி கண்ணில் பட்டிருக்கிறார் பூஜா. அவரது சிபாரிசின் அடிப்படையிலும் ஆடிசன் வைத்ததில் தேர்வானதாலும் பூஜா ஹீரோயினாகிவிட்டார்.

பூஜா மகிழ்ச்சி
தற்போது படப்பிடிப்புற்கு முந்தைய பணிகள் தொடங்கிவிட்டது. நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கிறது. "இந்த நிமிடத்தில் உலகிலேயே மகிழ்ச்சியான பெண் நான்தான்" என்று டுவிட்டரில் சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் பூஜா.

மணிரத்னம் பட வாய்ப்பு
இந்திப் படத்தில் நடிப்பதனால், இயக்குநர் மணிரத்னம் திரைபடத்தில் நடிக்கும் வாய்ப்பை பூஜா தவறவிட்டுள்ளார். மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் நடிக்க பூஜாவை அணுகியுள்ளனர்.

வாய்ப்பு போயிருச்சே!
ஆனால், 'மொகன்ஜோதாரோ' படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை, வேறெந்த படத்திலும் நடிக்கக் கூடாது என முன்னரே ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதால், மணிரத்னம் படத்தில் நடிக்க பூஜா மறுத்துவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











