கூலி ஆடியோ லாஞ்சுக்கு ’மோனிகா’ பூஜா ஹெக்டே வரமாட்டாரா?.. ஜனநாயகன் நடிகை ரொம்ப பிஸி போல!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இப்பவே ரசிகர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்று வீடியோக்களை வெளியிட ஆரம்பித்து விட்டனர். சன் பிக்சர்ஸும் தங்கள் பங்குக்கு ஆரம்பத்தில் அமீர்கான் நேரு ஸ்டேடியத்துக்கு வந்த வீடியோவை வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில், இன்று நடைபெறும் கூலி இசை வெளியீட்டு விழாவுக்கு யாரெல்லாம் வந்துள்ளனர் என்பது தொடர்பான அடுத்த வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்ட நிலையில், அப்போ மோனிகா பாட்டுக்கு அந்த ஆட்டம் போட்ட பூஜா ஹெக்டேவோட பர்ஃபார்மன்ஸ் இன்றைக்கு இருக்காதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Pooja Hegde not attending today evening Coolie Audio and Trailer Launch event
Photo Credit:

ஸ்ருதிஹாசன் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வரவுள்ள நிலையில், பூஜா ஹெக்டே வருவதை தவிர்த்து விட்டாரா? என ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன.

பேய் ஹிட் அடித்த மோனிகா: அனிருத் இசையில் உருவான கூலி படத்தின் மோனிகா பாடல் சிக்கிடு வைப் பாடலை முந்தி பேய் ஹிட் அடித்தது. பூஜா ஹெக்டே மோனிகா பெல்லூசி போல சிகப்பு நிற கவர்ச்சி கவுனில் டான்ஸ் ஆட அவரை தூக்கி சாப்பிடும் அளவுக்கு மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் செளபின் சாஹீர் போட்ட டான்ஸும் இணையத்தில் வைரலானது. கண்டிப்பாக ஆடியோ வெளியீட்டு விழாவில் பூஜா ஹெக்டேவின் லைவ் டான்ஸ் பர்ஃபார்மன்ஸ் இருக்கும் என எதிர்பார்த்து கூலி ஆடியோ லாஞ்ச் டிக்கெட்டுகளை அடித்து பிடித்து வாங்கிக் கொண்டு செல்லும் ரசிகர்களுக்கு இன்று பெரிய ட்ரீட் இருக்காது என்றே தகவல்கள் கசிந்துள்ளன.

கூலி ஆடியோ லாஞ்சில் பங்கேற்கும் பிரபலங்கள்: அமீர்கான் முதல் ஆளாக ஆஜர் ஆன நிலையில், கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் பிரபலங்களின் கேரவன்கள் குறித்த வீடியோவை சற்றுமுன் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், செளபின் சாஹீர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, லோகேஷ் கனகராஜ், அமீர்கான், உபேந்திரா, அனிருத் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரவன்கள் காட்டப்பட்டுள்ளன.

பூஜா ஹெக்டே வரமாட்டாரா?: நடிகை பூஜா ஹெக்டேவின் கேரவன் குறித்து வீடியோவில் காட்டாத நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் அவர் கலந்துக்கொள்ளமாட்டாரா? என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். விஜய்யின் ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அடுத்ததாக அவர் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 4 படத்தில் பிசியாக நடித்து வருவதால் கூலி இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.

சூப்பர் ஸ்டார் போதும்: கூலி இசை வெளியீட்டு விழாவின் நாயகன் அனிருத் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே போதும் கண்டிப்பாக அரங்கம் அதிரும். 50 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக கொடிகட்டிப் பறக்கும் பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷா இன்றைக்கு என்ன பேசப் போகிறார் என்பது தான் அடுத்து 12 நாட்களும் படம் வெளியாகும் வரை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களை கட்டி இழுக்கும் கன்டென்ட்டாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அமீர்கான் ரஜினிகாந்த் குறித்து பேசப்போவதையும் ஆர்வத்துடன் கேட்க ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X