இந்திப் பட ஹீரோவை காதலித்து வருகிறாரா அந்த பிரபல நடிகை? அவரே என்ன சொல்லியிருக்கார்னு பாருங்க!

By

சென்னை: இந்தி நடிகர் ஒருவரை நடிகை பூஜா ஹெக்டே காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. பிறகு தெலுங்கில் கவனம் செலுத்திய இவர், இந்தியிலும் நடிக்கத் தொடங்கினார்.

தெலுங்கில் இவர் நடித்த சில படங்கள் தொடர்ந்து ஹிட்டாக, அடுத்து டாப் ஹீரோக்கள் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

விஜய் ஹீரோயின்?

விஜய் ஹீரோயின்?

தமிழில் சூர்யாவின் அருவா படத்தில் இவர் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இதை அவர் மறுத்திருந்தார். தமிழில் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இன்னும் முடிவாகவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில், விஜய் அடுத்து நடிக்கும் படத்தில், இவர்தான் ஹீரோயின் என்கிறார்கள். ஆனால், இது உடுதிப்படுத்தப்படவில்லை.

ஜார்ஜியா

ஜார்ஜியா

இவர், இப்போது பிரபாஸ் நடிக்கும் பிரமாண்ட படத்தில், அவர் ஜோடியாக நடித்து வருகிறார். இது பீரியட் படம் என கூறப்படுகிறது. படத்தை கே கே ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. இதன் படப்பிடிப்புக்காக, பூஜா சமீபத்தில் ஜார்ஜியா சென்று வந்திருந்தார். விரைவில் இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

நான் சிங்கிள்தான்

நான் சிங்கிள்தான்

இதற்கிடையே, இவர் இந்தி நடிகர் ரோஹன் மெஹ்ராவை காதலிப்பதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாயின. இதுபற்றி எதுவும் கூறாமல் இருந்த பூஜா ஹெக்டே, இப்போது அது பற்றி கூறியுள்ளார். 'எனக்கு ரோஹனை தெரியும். நாங்கள் நல்ல நண்பர்கள். அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. நான் சிங்கிள்தான்.

நல்ல மனது

நல்ல மனது

எங்கிருந்து இப்படியொரு செய்தி கிளம்பியது என்று தெரியவில்லை' என்ற பூஜாவிடம் உங்களுக்கு வரும் காதலர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும். அடிப்படை புரிதலும் மரியாதையும் தரப்படவேண்டும். நகைச்சுவை உணர்வு, நல்ல மனது வேண்டும்' என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X