அன்றே கணித்த பூஜா ஹெக்டே.. விஜய் எப்படி வெட்கப்படுறாரு பாருங்க.. ஜன நாயகன் BTS வீடியோ தெறிக்குது!
சென்னை: ஜன நாயகன் திரைப்படம் இன்னமும் சென்சார் ஆகி ரிலீஸுக்கு தயாராகாத நிலையில், அந்த படம் லீக் ஆகி பல பேர் டவுன்லோடு செய்து பார்த்தும் விட்டனர். ஆனால், உண்மையான விஜய் ரசிகர்கள் மற்றும் சினிமா விரும்பிகள் படத்தை தியேட்டரில் பார்த்துக் கொள்கிறொம் என காத்திருக்கின்றனர்.
விஜய்யின் வெற்றியை தங்களின் வெற்றியாய் ஜீவா உள்ளிட்ட நடிகர்கள் கண்ணீர் சிந்தியும் விசில் அடித்தும் கொண்டாடி வருகின்றனர். அதே போல நடிகைகளும் லைன் கட்டி வந்து விஜய்க்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில், ஜன நாயகன் பட ஹீரோயின் பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள ஜன நாயகன் BTS வீடியோ ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
2வது முறை ஜோடி: நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் அரபிக் குத்து பாடல் யூடியூபில் மிகப்பெரிய சாதனையை படைத்து தமிழர்களை மட்டுமின்றி சர்வதேச அளவில் பல ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்திலும் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கிடைத்த நிலையில், தளபதி கச்சேரி பாடலுக்கு சேர்ந்து செம ஆட்டம் போட்டிருந்தார்.
விஜய் தான் வெல்வார்: ஜன நாயகன் என டைட்டில் வைத்து விஜய் தனது கடைசி படத்தில் நடிப்பதற்கு முன்பே அரசியல் கட்சியை ஆரம்பித்து விட்டார். 2026ம் ஆண்டு தேர்தலில் விஜய் தான் வெல்வார் என்பதை பூஜா ஹெக்டே போர்டில் இருந்த கேள்வியுடன் பதிலாக விஜய்யை காட்டி எடுத்த வீடியோவை தற்போது விஜய் வென்று முதலமைச்சராக வரும் மே 7ம் தேதி பொறுப்பேற்க உள்ள நிலையில், வெளியிட்டு, நான் அப்பவே சொல்லிட்டேன் எனபதிவிட்டுள்ளார்.
வெட்கப்படும் விஜய்: பூஜா ஹெக்டே அப்படி காட்டியதும் விஜய் வெட்கப்படும் அழகுதான் இந்த வீடியோவில் ஹைலைட் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சீக்கிரமாக சிஎம் விஜய்ன்னு டைட்டில் கார்டு போட்டு ஜன நாயகன் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யுங்க முதல்வர் அய்யா என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications