பூஜா ஹெக்டேவுக்கு என்னாச்சு..காலில் கட்டுடன் இருக்கும் போட்டோவால் ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை : நடிகை பூஜா ஹெக்டே காலில் கட்டுடன் இருக்கும் போட்டோவை பார்த்து அவரது ரசிகர்கள் என்ன ஆச்சு என பதறிப்போய் கேட்டு வருகின்றனர்.
பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரை 15 படங்களுக்கும் மேலாக பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
ஆனால் பெரிதாக எந்த நடிகருடனும் காதல் விவகாரங்கள் இருப்பதாகப் பெரிதாக கிசுகிசுக்கப்படாதவராகவே இருந்தார்.

பூஜா ஹெக்டேக்
பீஸ்ட் படத்தில் நடித்ததன்மூலம் மீண்டும் தமிழ்ப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாக முடியும் என்று எதிர்பார்த்து பூஜா ஹெக்டே காத்திருந்த இந்தப்படம் கலவையான விமர்சனங்களை கொடுத்ததால் தமிழில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. பூஜா நடிப்பில் தெலுங்கிலும் ஆச்சார்யா உள்ளிட்ட அடுத்தடுத்தப் படங்கள் தோல்வியை அடைந்த நிலையில், தற்போது வெற்றியை கண்டிப்பாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் பூஜா ஹெக்டேக் உள்ளார்.

சால்மான் கானுடன்
பாலிவுட்டில் பிரபல நடிகர்கள் சல்மான் கான், ரன்வீர் சிங் உள்ளிட்டவர்களுடனும் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.அண்மையில், உலக சுற்றுலாவை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பூஜா ஹெக்டே தற்போது சல்மானுடன் இணைந்து கிசி கா பாய் கிளி கி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பூஜா ஹெக்டேக்கு என்ன ஆச்சு
இந்நிலையில், பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காலில் கட்டுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில், ஹிந்தியில் இவர் நடித்த வரும் கிசி கா பாய் கிசி கி ஜான் என்கிற படத்தின் படப்பிடிப்பின் போது, தவறி விழுந்ததில், பூஜாவின் இடது காலில் உள்ள தசை நார் கிழிந்து வலியில் துடித்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

பதறிப்போன ரசிகர்கள்
தற்போது மருத்துவர்களின் அறிவுரை படி சில நாட்கள் ஓய்வுக்கு பின்னரே மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். தன்னுடைய காலில் கட்டுபோட்டுள்ள புகைப்படத்தை இஸ்டாகிராம் ஸ்டோரியில் அப்லோடு செய்துள்ளார். மேலும், இதைப்பார்த்து ரசிகர் பதறிப்போய் என்ன ஆச்சு என கேட்டு வருகின்றனர். ரசிகர்களும் விரைவில் பூஜா ஹெக்டே நலமுடைய தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











