Pooja Hegde Salary: மீண்டும் விஜய்யுடன் இணைந்த பூஜா ஹெக்டே.. அதிரடியாக அடித்த அதிர்ஷ்ட லட்சுமி!

சென்னை: சமீபத்தில் வந்த விஜய் படங்களிலேயே பழைய டைப் காஸ்டிங் கோட் படத்தில் தான் இருந்தது என ரசிகர்கள் புலம்பித் தவித்தனர். விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரியை கொண்டு வந்தது எல்லாம் ரசிகர்களை சுத்தமாக கவரவில்லை. மேலும், படத்திலும் அவரது கதாபாத்திரத்தை போட்டுத் தள்ளி விட்டனர்.

லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனை கொண்டு வந்திருந்தார். லியோ படத்தில் த்ரிஷாவை ஹீரோயினாக்கி இருந்தார். பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டேவை விஜய்க்கு ஜோடியாக பக்காவாக நெல்சன் இறக்கியிருந்தார்.

thalapathy 69 pooja hegde salary 69

ஆனால், படத்தில் அவர் திட்டமிட்டபடி பக்காவாக அவுட்புட் கொடுத்திருந்தால் பீஸ்ட் படமும் தரமாக வந்திருக்கும். சர்வதேச அளவில் ட்ரோல் ஆகியிருக்காது. பீஸ்ட் படத்தில் நடந்த ஒரே நல்ல விஷயம் என்னவென்றால் அனிருத் இசையில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே போட்ட அந்த ஹலமிதி ஹபிபோ பாடல் தான். அவ்வளவு அழகாக அதில் பூஜா ஹெக்டே நடித்திருப்பார். இந்நிலையில், மீண்டும் தளபதி உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், பூஜா ஹெக்டேவின் சம்பள விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் சம்பளம்: தளபதி 69 படத்தில் நடிக்க நடிகர் விஜய்க்கு இந்தியாவிலேயே இதுவரை எந்த ஹீரோவும் வாங்காத அளவுக்கு 275 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தை கேவிஎன் நிறுவனம் மற்றும் ஜெகதிஷ் பழனிச்சாமியின் தி ரூட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. தளபதி 69 படத்தை எச். வினோத் இயக்க உள்ள நிலையில், அனிருத் அந்த படத்துக்கு இசையமைக்கிறார். படத்தில் நடிக்கும் நடிகர்களின் அறிவிப்புகளை படக்குழு வெளியிட்டு வருகிறது.

thalapathy 69 pooja hegde salary 69

பாபி தியோல் முதல் மமிதா பைஜு வரை: விஜய்க்கு வில்லனாக இந்த படத்தில் சூர்யாவின் கங்குவா படத்தில் வில்லனாக நடித்துள்ள பாபி தியோல் நடிக்கிறார். சூர்யா 44 படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக இணைந்துள்ளார். மேலும், சூர்யாவின் வணங்கான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக காத்திருந்து ஏமாந்துப் போன மமிதா பைஜு ஜி.வி. பிரகாஷின் ரெபல் படத்தின் மூலம் அறிமுகமானாலும் அந்த படம் அவருக்கு தோல்விப் படமாக அமைந்த நிலையில், கோலிவுட்டில் தளபதி 69 படத்தின் மூலம் சூப்பரான என்ட்ரியை கொடுக்க காத்திருக்கிறார்.

thalapathy 69 pooja hegde salary 69

மீண்டும் பூஜா ஹெக்டே: நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து சொதப்பிய பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே மீண்டும் விஜய்க்கு ஜோடியாக தளபதி 69 படத்தில் இணையவுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பூஜா ஹெக்டே நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியை தழுவி வந்த நிலையில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் இருந்து நீக்கப்பட்ட பூஜா ஹெக்டேவுக்கு பட வாய்ப்புகளே கிடைக்காமல் இருந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 44 படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில், தற்போது தளபதி 69 படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார். பூஜா ஹெக்டே இதுவரை தமிழில் நடித்த முகமூடி மற்றும் பீஸ்ட் படங்கள் ஓடாத நிலையில், சூர்யா 44 மற்றும் தளபதி 69 படம் அவருக்கு வெற்றிப் படங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூஜா ஹெக்டே சம்பளம்: சூர்யா 44 படத்தில் 4 கோடி ரூபாய் சம்பளம் பூஜா ஹெக்டேவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தளபதி 69 படத்தில் நடிக்க 5 முதல் 6 கோடி ரூபாயாக பூஜா ஹெக்டேவுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மமிதா பைஜுவுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் இந்த படத்தில் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X