“ராதே ஷ்யாம்“ பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம்… ஷாக்கான ரசிகர்கள் !

சென்னை : டாப் ஹீரோயினாக மாறி உள்ள பூஜா ஹெக்டே ராதே ஷ்யாம் திரைப்படத்திற்காக வாங்கி உள்ள சம்பளம் அவரது ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது-

Recommended Video

Radhe Shyam Movie Audience | Prabhas | Pooja Hegde | Public Review

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் உருவாகி உள்ள இத்திரைப்படம் மார்ச் 11 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

ராதே ஷ்யாம் திரைப்படம் தமிழகத்தில் மட்டும 175 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

இந்திய சினிமாவின் மிகசிறந்த ஹிட் ஹீரோயின்களில் ஒருவராக மாறி உள்ளார் பூஜா ஹெக்டே. 2010 ஆம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தைப் பிடித்து, பூஜா மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். சூப்பர் ஹீரோ திரைப்படமாக இருந்தாலும் இத்திரைப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை.

பீஸ்ட் படத்தில்

பீஸ்ட் படத்தில்

தமிழில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் சென்று, தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்தார். பூஜா ஹெக்டே அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த ஆல வைகுந்தபுரமுலூ திரைப்படத்தில் இடம்பெற்ற புட்டபொம்மா பாடல் உலகளவில் ஹிட் அடித்து பூஜா ஹெக்டேவை டாப் லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது. தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில்நடித்து வருகிறார்.

இவ்வளவு சம்பளமா

இவ்வளவு சம்பளமா

டாப் கதாநாயகிகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஏகப்பட்ட ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பிடித்த பூஜா ஹெக்டே தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி உள்ளாராம். ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடிக்க ரூ 3 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். இப்படத்தில் நடிக்க பிரபாஸூக்கு 100 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இணையாக பூஜாவும் கோடியில் சம்பளத்தை வாங்கி உள்ளார்.

ராதே ஷ்யாம்

ராதே ஷ்யாம்

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள ராதே ஷ்யாம் திரைப்படத்தை யூவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர். ஆஸ்ட்ரோ த்ரில்லர் ப்ளஸ் காதல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா என பலரும் நடித்துள்ளனர்.

மார்ச் 11ந் தேதி ரிலீஸ்

மார்ச் 11ந் தேதி ரிலீஸ்

கைரேகை நிபுணராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் பிரபாஸ் கவனம் ஈர்க்கிறார். சூத்திரதாரியாக நடிகர் அமிதாப் பச்சன் குரல் கொடுத்திருப்பது, அதிநவீன விஷுவல் எஃபெக்ட்ஸ்கள், இத்தாலி, ஜார்ஜியா மற்றும் ஹைதராபாத்தில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. மார்ச் 11ந் தேதி வெளியாக உள்ள இத்திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 175 திரையரங்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X