வாவ்.. பூஜா ஹெக்டேவா இது.. எப்படி ஒர்க்கவுட் பண்றாங்க பாருங்க.. வாயை பிளக்கும் ஃபேன்ஸ்!
ஹைதராபாத்: நடிகை பூஜா ஹெக்டேவின் ஜிம் ஒர்க்கவுட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.
தற்போது, டோலிவுட், பாலிவுட் படங்களில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

அல்லு அர்ஜுன்
சங்கராத்தி பண்டிகையை முன்னிட்டு வெளியான அல்லு அர்ஜுனின் அலா வைகுந்த புரமுலோ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் பூஜா ஹெக்டே. அல்லு அர்ஜூனின் இந்த படம் வெளியாகி சில நாட்களிலேயே 200 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை எட்டியது குறிப்பிடத்தக்கது. பூஜா ஹெக்டேவுக்கு டோலிவுட்டில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
ஜிம் புகைப்படம்
அலா வைகுந்த புரமுலோ படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கும் பூஜா ஹெக்டே தனது அடுத்த படங்களுக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில், பூஜா ஹெக்டே இன்று வெளியிட்டுள்ள ஜிம் ஒர்க்கவுட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தினமும் காலையில் இப்படி தான் எந்திரிப்பேன் என அவர் கொடுத்துள்ள கேப்ஷனுக்கு பலரும் லைக் போட்டு வருகின்றனர்.

குவிகிறது லைக்ஸ்
பால் பச்சை நிற ஜிம் டிராக் ஷூட்டில், வித்தியாசமான ஸ்ட்ரெச்சிங் ஒர்க்கவுட் செய்யும் பூஜா ஹெக்டேவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அவரது ஒர்க்கவுட் திறமையை கண்டு அதிசயித்து வருகின்றனர். தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பூஜா ஹெக்டே பதிவிட்ட சில மணி நேரத்தில் 3.5 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளன.
Recommended Video
பிகினி கேர்ள்
மேலும், அடிக்கடி தனது ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தில் ரசிகர்களை கிரங்கடித்து வரும் பூஜா ஹெக்டே, சமீபத்தில் வெளியிட்ட வெள்ளை நிற பிகினி புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. டோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் பூஜா ஹெக்டே, மற்ற நடிகைகளுக்கு கவர்ச்சியில் செம்ம டஃப் கொடுத்து வருகிறார்.

பிரபாஸ் ஜோடி
பாகுபலி, சாஹோ படங்களில் நடித்த பிரபாஸின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக சமீபத்தில் ஐரோப்பாவில் 30 கோடி ரூபாயில் பிரம்மாண்ட செட் ஒன்று போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











