அழகான பெண்கள் எது செஞ்சாலும் அழகுதான்... சோம்பல் முறித்து கொட்டாவி விட்ட பூஜா ஹெக்டே

சென்னை : நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் அவர் இரவு பகல் பாராமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சமூக வலைதளத்திலும் அவர் பிசியாக காணப்படும் நிலையில், தற்போது சூட்டிங் ஸ்பாட்டில் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் மோஸ்ட் எலிஜிபள் பேச்சுலர் என்ற படம் தெலுங்கில் வந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அகிலுடன் இவர் நடித்துள்ள இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கும் இவருக்கு ஸ்கோப் இருந்தது

பீஸ்ட் பட நாயகி

பீஸ்ட் பட நாயகி

அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் பூஜா ஹெக்டே. தமிழிலும் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் படத்தின் வெற்றியை அடுத்து இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

தொடர் சூட்டிங்

தொடர் சூட்டிங்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஷாப்பிங் மால் செட் போடப்பட்டு பல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படத்தில் விஜய்யுடன் சிறப்பாக பூஜா பொருந்தியுள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

புகைப்படம் வெளியீடு

புகைப்படம் வெளியீடு

இந்நிலையில் தமிழ், தெலுங்கு என தொடர்ந்து சூட்டிங்கில் ஈடுபட்டுவரும் பூஜா, அதைத் தொடர்ந்து பயணங்களையும் மேற்கொண்டு வருகிறார். இதனால் அவருக்கு ஓய்வு கிடைப்பது அரிதாக உள்ளது. இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் தான் கொட்டாவியுடன் காணப்படும் புகைப்படத்தை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்

ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்

கொட்டாவி மற்றவர்களுக்கு பரவும்தானே என்று அவர் கேப்ஷனில் அப்பாவித்தனமாக கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அழகான பெண்கள் எதை செய்தாலும் அழகுதான் என்னும்படியாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Recommended Video

சப்பைனா என்ன அர்த்தம்னு தெரியாது | Actress Sheriina Exclusive | Filmibeat Tamil
பூஜா ஹெக்டேவின் ஆசை

பூஜா ஹெக்டேவின் ஆசை

ஹீரோயின் ரோல்களில் நடித்துவரும் பூஜா, சமீபத்தில் ஜெய்ப்பூர் மகாராணி காயத்ரி தேவியின் பயோபிக்கில் நடிக்கும் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். ரசிகர்களிடையே சமீபத்தில் உரையாடிய அவர், இதனை கூறியுள்ளார். ராஜமாதா என்று ஜெய்ப்பூர் மக்களால் கொண்டாடப்பட்ட காயத்ரி தேவி, 12 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X