போகஸ் மிஸ் ஆகாமல் முதுகை காட்டி போதையேற்றும் புட்டபொம்மா நடிகை!
ஹைதராபாத் : மாஸ்டரின் மிரட்டலான வெற்றியை தொடர்ந்து விஜய் நடித்து வரும் 65வது திரைப்படத்தில் ஜோடியாக நடிக்கிறார் புட்டபொம்மா நடிகை பூஜா ஹெக்டே.
ஒரே ஒரு பாடலின் மூலம் ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த இவர் ராதே ஷ்யாம், ஆச்சாரியா உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
தெலுங்கு, ஹிந்தி,தமிழ் என ரவுண்டு கட்டி நடித்துக்கொண்டிருக்கும் பூஜா தற்போது லேஸ் மட்டும் தெரிய போகஸ் மிஸ் ஆகாமல் முதுகை காட்டும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை தவிக்கவிட்டுள்ளார்.

சீக்கிரம் கொண்டு வாங்க
தென்னிந்திய ரசிகர்களின் கனவுக்கன்னியாக இப்போது உள்ள நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கில் வெளியான அலா வைகுண்டபுரம்லோ திரைப்படத்தில் நடித்து புட்டபொம்மா என்ற பாடலின் மூலம் தற்போது பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி இருக்க சீக்கிரம் செல்லத்த தமிழ் சினிமாவுக்கு கொண்டு வாங்க என ரசிகர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தளபதி விஜயின் 65வது திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் இந்த முறை விஜய்யை இயக்க விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முதல் கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.

சிரஞ்சீவிக்கு ஜோடியாக
பாகுபலியை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் ஒவ்வொரு திரைப் படத்தின் பட்ஜெட்டும் ஏறிக்கொண்டே போக இப்பொழுது பல கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடித்துவரும் இவர் அதேசமயம் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சாரியா படத்திலும் நடித்து வருகிறார்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டார் பாடங்களில்
இவ்வாறு தொடர்ந்து சூப்பர் ஸ்டார் பாடங்களில் இடம் பிடித்து வரும் பூஜா ஹெக்டே தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டவர். முகமூடி ப்ளாப் ஆனதால் தமிழ் சினிமாவிற்கு குட்பை சொல்லிவிட்டு சென்ற பூஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

போதை ஏற்றும் புட்டபொம்மா
தமிழ்,தெலுங்கு என தென்னிந்தியாவை கலக்கிக் கொண்டிருக்கும் அதே சமயம் பாலிவுட்டிலும் படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக உள்ள பூஜா தற்போது அனைவரையும் சிலிர்க்க வைக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஹாட் ஆக்கியுள்ளார். கொஞ்சம் கூட போகஸ் மிஸ் ஆகாமல் லேஸ் மட்டும் தெரிய முதுகை காட்டிக்கொண்டு போதை ஏற்றும் பார்வையால் தவிக்க விடும் இந்த புட்டபொம்மாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











