Pooja Hegde : பாலிவுட் பக்கம் போன ராசியில்லாத நடிகை..கடைசி வாய்ப்பு கைக்கூடுமா?
சென்னை : தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ராசியில்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே, பாலிவுட்டில் ஜெயிக்க படாதபாடு பட்டு வருகிறார்.
பல வெற்றிப்படங்களை இயக்கிய மிஸ்கின் இயக்கத்தில் முகமூடி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே,

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரை 15 படங்களுக்கும் மேலாக பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
நடிகை பூஜா ஹெக்டே : கோலிவுட்டில் வாய்ப்பை தவறவிட்ட நடிகை பூஜா ஹெக்டே, பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் படங்களில் கமிட்டாக முடியும் என்று பெரிதும் நம்பி இருந்தார். ஆனால், அந்த படத்திற்கு படுமோசமான விமர்சனங்கள் வந்து இணையத்தையே திணறடித்தது. அது மட்டும் இல்லாமல் பாடல்களை தவிர அந்த படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு சொல்லும்படி எந்த வசனமும் இல்லை. பீஸ்ட் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என்று நினைத்து இருந்த பூஜாவின் கனவு நிறைவேறாமல் போனது.

காலை வாரிவிட்ட டோலிவுட் : கோலிவுட் கைக்கொடுக்காததால், நமக்கு இருக்கவே இருக்கு டோலிவுட் என அங்கு சென்ற அம்மணி, சிரஞ்சீவி, ராம் சரண் நடித்த ஆச்சார்யா படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் காலை வாரிவிட்டதால், பாகுபலி புகழ் பிரபாசுடன் இணைந்து ராதே ஷ்யாம் படத்தில் நடித்தார். பல கோடி ரூபாயில் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தி படமாக வெளியான இந்த பூஜா ஹெக்டேவுக்கு ராசி இல்லாத நடிகை என்ற பெயரைப் பெற்றுத்தந்துவிட்டது.

படாத பாடுபடும் பூஜா ஹெக்டே: இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் ரன்வீர் கபூடன் இணைந்து சர்க்கஸ் படத்தில் நடித்தார். இந்த படமும் தோல்வி அடைந்தது. எப்படியாவது ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆகவேண்டும் என்று படாத பாடுபட்டு வரும் பூஜா ஹெக்டே அஜித் நடித்த வீரம் படத்தின் இந்தி ரீமேக்கான 'கிசி கா பாய் கிசி கி ஜான்' என்ற படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் ஏப்ரல் 21ந் தேதி வெளியாக உள்ளது. இதுதான் கடைசி வாய்ப்பு இதுவும் கை நழுவிப்போய்விட்டால், அவ்வளவு தான் என்பதால், பூஜா மிகுந்த பீதியில் இருப்பதாக கூறப்படுகிறது.

SSMB28 படத்தில் : தற்போது பூஜா ஹெக்டே மகேஷ் பாபுவின் 28வது படமான SSMB28 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13ந் தேதி வெளியாக உள்ளது. மேலும், லிங்குசாமி இயக்கத்தில் பையா 2 படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் அவருக்கு ஜோடியாக நடிக்க பூஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்த இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











