தண்ணீரில் வைத்து பூஜா ஹெக்டேவை தூக்கும் ஹீரோ.. ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்படி செய்றாரு?.. வைரலாகும் வீடியோ
மும்பை: தமிழ் சினிமாவில் இப்போது டாப்பில் இருக்கும் ஹீரோயின்களில் ஒருவர் பூஜா ஹெக்டே. ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்த அவர்; இப்போது ஜனநாயகன் படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால் அந்தப் படம் இணையத்தில் லீக்காகி பெரிய அதிர்ச்சியை கிளப்பியது. அதுகுறித்து பூஜாவும் தன் கண்டனத்தை பதிவு செய்தார். சூழல் இப்படி இருக்க பூஜா ஹெக்டே தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.
ஜீவாவை வைத்து மிஷ்கின் இயக்கிய திரைப்படம் முகமூடி. அந்தப் படத்துக்கு மிகப்பெரிய ஹைப்பை இயக்குநர் தனது பேச்சின் மூலம் எகிற வைத்தார். அந்தப் படத்தில்தான் பூஜா ஹெக்டே ஹீரோயினாக அறிமுகமானார். படம் படுதோல்வியை சந்தித்ததல் பூஜாவுக்கும் வெளிச்சம் கிடைக்காமல் போனது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டுக்கு சென்ற அவர்; அங்கு தனக்கான மார்க்கெட்டை அதிகப்படுத்தினார். மேலும் அவ்வப்போது தெலுங்கு மொழியிலும் நடித்துவந்தார். இருப்பினும் தமிழில் இரண்டாவது ரவுண்டு வர ஆர்வத்தோடு இருந்தார்.

கம்பேக் அந்த பூஜா ஹெக்டே: அந்த சூழலில்தான் விஜய்யை வைத்து நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் மூலம் பூஜாவை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார். ஆனால் பூஜாவின் நேரமோ என்னமோ தெரியவில்லை அந்தப் படம் முகமூடியைவிடவும் மோசமான தோல்வியை சந்தித்தது. ஆனால் இந்த முறை அவருக்கான வெளிச்சமும், பெயரும் கிடைத்தன. இதன் காரணமாக தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அந்த வகையில் சூர்யாவுக்கு ஜோடியாக ரெட்ரோ படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படமும் தோல்விதான்.
ஜனநாயகன் பூஜா: அவர் தமிழில் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்தாலும்; விஜய்க்கு ஜோடியாக ஜனநாயகன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்பட்டிருக்கும் படத்தில் நடிப்பதால் பூஜா ரொம்பவே ஹேப்பியாக இருந்தார். கண்டிப்பாக இதற்கு முன்னர் மாதிரி இந்தப் படத்தில் ரிசல்ட் அமையாது என்றுதான் ஆர்வத்தோடு இருந்தார். ஆனால் எல்லாத்துக்கும் மேலே பெரிய ஆப்பாக இணையத்தில் அந்தப் படம் லீக்காகிவிட்டது. அதற்கு பூஜாவும் தனது கண்டனத்தை பதிவு செய்து வைத்திருந்தார்.
பூஜாவின் கண்டனம்: அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், "அன்பான ரசிகர்களே உங்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுப்பதற்காகத்தான் எங்களது தனிப்பட்ட வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு எங்கள் குழு பலமணி நேர உழைப்பை கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட படம் இணையத்தில் லீக்கானது வருத்தமாக இருக்கிறது. விஜய் சாரின் கடைசி படத்தை பெரிய திரையில் கொண்டாடுவதுதானே சரி. எனவே திரைக்கு படம் வரும் வரை காத்திருப்போம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
தூக்கிய வருண் தவான்: இந்நிலையில் பூஜா ஹெக்டே தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது. அதாவது அவர் வருண் தவானுடன் 'ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை'என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் மே 22ஆம் தேதி ரிலீஸாகிறது. அப்படத்தின் ஷூட்டிங் ஒரு கடற்கரையில் நடந்திருக்கிறது. அப்போது கடலில் இடுப்பளவு நீரில் நின்றபடி பூஜா ஹெக்டேவை தூக்கி தனது தோளில் வைத்தார் வருண் தவான்.மேலும் அவரை தூக்கியபடி நீரிலிருந்து கரைக்கும் வந்தார். அதனைப் பார்த்த ரசிகர்களோ அட வருண் தவான் இப்படி செஞ்சுட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
