லாக்டவுன் மட்டும் முடியட்டும்.. நேரா அந்த பீச்சுக்குத்தான் போகணும்..பிரபல நடிகையின் கோடை திட்டம்!
சென்னை: லாக்டவுன் முடிந்ததும் பேக்கல் பீச்சுக்கு செல்ல விரும்புவதாகத் தெரிவித்துள்ளார், பிரபல நடிகை!.
Recommended Video
மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில், ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. பிறகு தமிழில் அதிக படங்களில் நடிக்கவில்லை.
தெலுங்கில் கவனம் செலுத்திய பூஜா ஹெக்டே, இந்தியிலும் நடிக்கத் தொடங்கினார். தெலுங்கில் இவர் நடித்த சில படங்கள் தொடர்ந்து ஹிட்டானது.

விஜய் ஹீரோயின்
இதனால், டாப் ஹீரோக்கள் ஜோடியாக இப்போது நடித்து வருகிறார். தமிழில் சூர்யாவின் அருவா படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டதை சமீபத்தில் மறுத்திருந்தார். தமிழில் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறியிருந்தார். விஜய் அடுத்து நடிக்கும் படத்தில், இவர்தான் ஹீரோயின் என்கிறார்கள்.

பீரியட் படம்
பிரபாஸ் நடிக்கும் பிரமாண்ட படத்தில், அவர் ஜோடியாக நடித்து வருகிறார். இது பீரியட் படம். கே கே ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதன் படப்பிடிப்புக்காக, பூஜா சமீபத்தில் ஜார்ஜியா சென்று வந்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தியில் இந்தப் படம் உருவாகிறது.

கபி ஈத் கபி தீவாளி
இதையடுத்து இந்தியில் இப்போது சல்மான்கான் ஜோடியாக, கபி ஈத் கபி தீவாளி (Kabhi Eid Kabhi Diwali) என்ற படத்தில் நடிக்கிறார். லாக்டவுன் காரணமாக, படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நடிகர், நடிகைகள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் இந்த லாக்டவுன் முடிந்ததும், பேக்கல் (Bekal) பீச்சுக்கு செல்ல வேண்டும் என்று நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

லாக்டவுன்
பேக்கல் பீச், கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது. பல படங்களின் ஷூட்டிங் இங்கு நடந்துள்ளது. பம்பாய் படத்தில் வரும், உயிரே உயிரே பாடல் காட்சி இங்கு எடுக்கப்பட்டதுதான். லாக்டவுன் முடிந்ததும் வெளிநாடுகளுக்கு உடனே செல்ல முடியாது என்பதால் கோடைக்கு, இங்கு செல்ல இருக்கிறாராம் பூஜா.


Click it and Unblock the Notifications











