ஜெயிலர் படத்துல தமன்னா குத்தாட்டம் போட்டது போல.. கூலி படத்தில் ஜனநாயகன் ஹீரோயின் ஆடப்போறாரா?
சென்னை: பெரிய படங்களில் ஹீரோயின்களை ஐட்டம் டான்சர்களாக மாற்றும் வழக்கம் நடைபெற்று வரும் நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் குத்தாட்டம் போட போகிறார் நடிகை பூஜா ஹெக்டே என தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க முடிவு செய்து சூர்யாவுடன் ரெட்ரோ மற்றும் விஜய்யுடன் ஜனநாயகன் என இரண்டு பெரிய படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டேவை ஒரு செம சூப்பரான பாட்டுக்கு ஆட்டம் போட வைக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

புஷ்பா படத்தில் சமந்தாவும், புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலாவும், ஜெயிலர் படத்தில் தமன்னாவும் நடனமாடிய நிலையில், அந்த வரிசையில் பூஜா ஹெக்டே ஆடப்போவதாக கூறுகின்றனர்.
கூலியில் பூஜா ஹெக்டே: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், செளபின் சாஹீர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் கூலி படத்தின் ஷூட்டிங் விரைவில் முடியப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே அனிருத் இசையில் வெளியான 'சிக்கிடு' பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், காவாலா பாடலை தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒரு பாடலில் பூஜா ஹெக்டே நடனமாடப் போவதாக கூறுகின்றனர்.

ஆடினாலே ஹிட்தான்: அல்லு அர்ஜுன் உடன் இணைந்து புட்டபொம்மா பாடலுக்கு ஆடி ஃபேமஸ் ஆன பூஜா ஹெக்டே விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் ஹலமிதி ஹபிபோ பாட்டுக்கும் செம டான்ஸ் போட்டிருந்தார். பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து கிஸி கா பாய் கிஸி கி ஜான் படத்தில் வேட்டி எல்லாம் கட்டிக் கொண்டு செம டான்ஸ் போட்டிருந்தார் பூஜா ஹெக்டே. தொடையழகை காட்டி அவர் ஆட்டம் போட்டாலே செம ஹிட்தான் என்கின்றனர். சமந்தாவுக்கு புஷ்பா படத்தில் கொடுத்தது போல பல கோடி சம்பளம் கிடைக்கும் என்கின்றனர்.
ஜனநாயகன் ஜோடி: சூர்யாவுடன் ரெட்ரோ மற்றும் விஜய்யுடன் ஜனநாயகன் படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும் போதே சூப்பர் ஸ்டார் படத்தில் குத்தாட்டம் போடப் போகிறாரா பூஜா ஹெக்டே என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்கின்றனர். அனிருத் இசையில் அடுத்த அட்டகாசமான பாடல் ஆன் தி வே என்கின்றனர்.



Click it and Unblock the Notifications











