பூஜா ஹெக்டேவுக்கு இவ்வளவு நல்ல மனசா?.. என்ன செஞ்சுருக்காங்க பாருங்க.. உண்மையில் கிரேட்தான்

சென்னை: பூஜா ஹெக்டே இப்போது கோலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவர். அவர் இதுவரை தமிழில் நடித்திருக்கும் முகமூடி, பீஸ்ட், ரெட்ரோ ஆகிய படங்கள் தோல்வியைத்தான் சந்தித்திருக்கின்றன. இருந்தாலும் அவருக்கான மார்க்கெட் அப்படியே இருக்கிறது. அடுத்ததாக அவர் முதலமைச்சர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் ஜனநாயகன் படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் பூஜா ஹெக்டே தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழில் தனது திரை பயணத்தை தொடங்கிய பூஜா ஹெக்டேவுக்கு கோலிவுட் சரியான வரவேற்பை கொடுக்கவில்லை. அவர் நடித்த முதல் படமான முகமூடி திரைப்படம் எவ்வளவு மோசமான விமர்சனங்களை பெற முடியுமோ அந்த அளவுக்கு பெற்றது. அதன் காரணமாக அவர் வந்த வேகத்திலேயே கோலிவுட்டிலிருந்து சென்றார். அதனையடுத்து தெலுங்கிலும், ஹிந்தியிலும் பூஜாவுக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதனையடுத்து தெலுங்கும், ஹிந்தியில் பிஸியாக இருந்த அவரை நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் மீண்டும் அழைத்து வந்தார்.

Pooja Hegde Wins Hearts After Patiently Taking Selfie With Fan Viral Video Trends
Photo Credit:

தோல்வியடைந்தாலும் மவுசுதான்: நெல்சன் - விஜய் கூட்டணியில் பெரிய எதிர்பார்ப்போடு வெளியான பீஸ்ட் படம் ஃப்ளாப்தான். ஆனாலும் பூஜாவுக்கு கோலிவுட் கதவுகள் வரவேற்பையே கொடுத்தன. அந்தவகையில் சூர்யாவுக்கு ஜோடியாக ரெட்ரோ படத்தில் நடித்தார். அதில் இடம்பெற்ற கன்னிமா பாடலுக்கு அவருடன் நடனமாடி ஒட்டுமொத்த தமிழ்நாடும் வைப் செய்தது. அடுத்ததாக ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில் மோனிகா பாடலுக்கு சூப்பர் ஆட்டம் போட்டு அனைவரையும் கவர்ந்தார்.

Also Read
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.. திரிஷாவுக்கு குவியும் ஆஃபர்கள் இதுவா?.. என்ன நடக்குது?
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.. திரிஷாவுக்கு குவியும் ஆஃபர்கள் இதுவா?.. என்ன நடக்குது?

முதலமைச்சருடன் பூஜா: ரெட்ரோ, கூலி படங்கள் தோல்வியடைந்தாலும் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படத்திலும் ஹீரோயினாக கமிட்டானார் பூஜா. இந்தப் படத்தில் அவர் கயல் (பத்திரிகையாளர்) என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். இதற்கு முன் தனக்கு அமைந்த படங்கள் போல் இது அமையாது என்ற நம்பிக்கையில் இருக்கிறார். படம் இணையத்தில் கசிந்தாலும்; விஜய் இப்போது முதலமைச்சர் ஆகிவிட்டதால் நிச்சயம் இப்படம் ரிலீஸாகி பெரிய ஹிட்டாகும் என்ற பார்வைதான் திரைத்துறையில் இருக்கின்றன.

பூஜாவுக்கும் நம்பிக்கை: பூஜா ஹெக்டேவுக்கும் அதே நம்பிக்கைதான் இருக்கிறது. நிச்சயம் இந்தப் படம் ஹிட்டாகிவிடும்; முதலமைச்சரின் படத்தில் ஹீரோயினாக நடித்த பெருமையை ரொம்பவே கொண்டாடிவருகிறார் என்றே தெரிகிறது. அதுமட்டுமின்றி இந்தப் படத்துக்கு பிறகும் கண்டிப்பாக தனக்கு பெரிய படங்களின் வாய்ப்புகள் வந்து குவியும் என்றும் நம்பியிருக்கிறார். இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

என்ன வீடியோ?: அதாவது பூஜா ஹெக்டே பொது இடத்தில் தனது காரில் ஏறியபோது; ஒரு சாமானிய ரசிகை அவருடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டார். ஆனால் அந்த ரசிகையோ உடனடியாக செல்ஃபி எடுக்கக்கூடிய அளவுக்கு நிதானமாக இல்லை. ஆனாலும் பொறுமையாக காத்திருந்த பூஜா அந்த ரசிகை எடுத்த செல்ஃபிக்கு காரில் அமர்ந்து சிரித்தபடி போஸ் கொடுத்தார். மேலும் அந்த ரசிகையிடம், 'நன்றி' எனவும் தெரிவித்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ, இந்நேரத்துக்கு வேறு யாராவது இருந்திருந்தால் அங்கிருந்து கிளம்பியிருப்பார். ஆனால் பூஜாவோ ரசிகைக்கு மரியாதை கொடுத்து காத்திருந்து செல்ஃபிக்கு போஸ் கொடுத்திருக்கிறார். உண்மையில் அவர் கிரேட்தான் என்று கமெண்ட்ஸ் செய்து பாராட்டிவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X