ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் கனிமா.. அரபிக் குத்து பூஜா ஹெக்டேவா இது.. ரசிகர்கள் குத்தாட்டம்

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற கனிமா பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்கி வருகிறது. இப்படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் மஜாவாக குத்தாட்டம் போட்டிருப்பார். இப்படத்தில் இடம்பெற்ற வரிகளும் துள்ளலாக இருக்கின்றனர். பூஜா ஹெக்டேவின் நடன அசைவுகள் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இப்பாட்டின் சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. ஆர்வத்துடன் ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர்.

தற்போது சினிமா ரசிகர்கள் பிடித்த பாடலை ரீ கிரியேட் செய்வது அல்லது கிரியேட்டிவாக யோசித்து சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் வீடியோக்கள் அதிகம் பகிரப்படுவது வாடிக்கையாகிவிட்டது. ஊர் திருவிழா, கல்லூரி ஆண்டு விழா அல்லது ஏதேனும் மேடைகளில் வைப் மோடில் பிடித்த பாடல்களுக்கு நடனமாடி கொண்டாடி வருகின்றனர். வாத்தி கமிங்கில் தொடங்கி தற்போது ரெட்ரோ படத்தில் இடம்பெற்றிருக்கும் கனிமா பாடல் வரை அது தொடர்கிறது.

Pooja Hegde s dance to the song Kanima goes viral

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் ஜோஜூ சார்ஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். குறிப்பாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா, மகான், பேட்ட படங்கள் எல்லாமே கேங்ஸ்டர் கதையாகவே உருவாகியிருக்கிறது. கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமும் அதேபாணியில் வெளிவந்து மெகாஹிட் அடைந்தது. சமீபத்தில் வெளியான ரெட்ரோ படத்தின் டீசரும் கேங்ஸ்டர் பற்றிய படமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

காதல் படம்: சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் அளித்த பேட்டியில், நான் இயக்கும் படங்கள் எல்லாமே கேங்ஸ்டர் படம் என்றே முத்திரை குத்துகின்றனர். ஆனால் ரெட்ரோ அதுமாதிரியான படம் இல்லை. முழுக்க முழுக்க காதல் படம் என விளக்கம் அளித்தார். ரசிகர்கள் கண்டிப்பாக இப்படத்தை ரசிப்பார்கள் என தெரிவித்தார். ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற கண்ணாடி பூவே பாடல் சமீபத்தில் வெளியாகி திரை ரசிகர்களை காதலில் உருக வைத்தது. ஜெயிலில் இருக்கும் சூர்யா காதலியை நினைத்து வாடுவது போன்று பாடம் இடம்பிடித்திருக்கிறது.

Pooja Hegde s dance to the song Kanima goes viral

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் துள்ளலான பாடல் அமைப்பதில் வல்லவர். கார்த்திக் சுப்பராஜ் - சந்தோஷ் நாராயணன் காம்போவில் உருவான ஜிகர்தண்டா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மகான் போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கின்றனர். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இடம்பெற்ற மாமதுரை பாட்டு பட்டிதொட்டியெங்கும் கலக்கியது. மதுரை மண்வாசனை அப்பாட்டில் வீசியது என்றே கூறலாம். அந்த அளவிற்கு துள்ளலாகவும் இருந்தன.

கனிமா வைரல்: தற்போது தமிழ் ரசிகர்களை கனிமா பீவர் பிடித்திருக்கிறது என்றே கூறலாம். சமீபத்தில் வெளியான ரெட்ரோ படத்தின் 2வது பாடல் கனிமா ரொம்ப துள்ளலாக வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. பூஜா ஹெக்டேவின் நடன அசைவுகளில் ரசிகர்கள் சொக்கி கிடக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்தில் இறங்கி குத்தாட்டம் போட்டிருக்கிறார். எந்தப்பக்கம் திரும்பினாலும் கனிமா பீவர் தான் ஆட்டிப்படைக்கிறது. இதனிடையே, சூர்யாவுக்கு தமிழை தாண்டி கேரளாவிலும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். கனிமா பாட்டிற்கு பேருந்துக்குள் குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோதான் வைரலாகி வருகிறது. மஜாவாக ஜாலி பன்றாங்கப்பா என்றே ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். முன்னதாக அயன் படத்தில் இடம்பெற்ற பளபளக்குற பகலா நீ பாடலை ரீ கிரியேட் செய்து ஆட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது.

ரெட்ரோ ரிலீஸ் எப்போது: கார்த்திக் சுப்பராஜ் - சூர்யா காம்போ வித்தியாசமாக இருப்பதாலும், பாடல்களும் கவனத்தை ஈர்த்துள்ளதால் ரெட்ரோ ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ரெட்ரோ படம் மே 1ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதே நாளில் சசிகுமார் நடித்திருக்கும் டூரிஸ்ட் பேமிலி படமும் ரிலீஸ் ஆவதால் பெரும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. ரெட்ரோ படத்துடன் சசிகுமார் போட்டிக்கு தயாராக இருக்கிறார். ஒரு பக்கம் காதல் மற்றொரு பக்கம் இலங்கை தமிழர்களின் வாழ்க்கை என மாறுபட்ட ரசனையுடன் 2 படங்கள் வெளியாகின்றன.

FAQs
பூஜா ஹெக்டே நடித்த முதல் படம் எது?

முகமூடி

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X