கமலுக்கான ஆதரவா?.. திடீரென உத்தம வில்லன் பட மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பூஜா குமார்!

சென்னை: உத்தம வில்லன் திரைப்படம் எங்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திய திரைப்படம் என இயக்குநரும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளருமான லிங்குசாமி தெரிவித்த நிலையில், அந்த படத்திற்காக தான் பட்ட கஷ்டத்தை வெளிப்படுத்தும் வகையில் நடிகை பூஜா குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 மற்றும் உத்தம வில்லன், மீன் குழம்பும் மண் பானையும் என தொடர்ந்து 4 படங்களில் கமல்ஹாசனுடன் இணைந்து பூஜா குமார் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Pooja Kumar shares Uttama VIllain making video and lend her support to Kamal Haasan

விஸ்வரூபம் 2 படத்தின் தோல்விக்கு பிறகு தமிழில் அவர் எந்தவொரு படத்திலும் நடிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல வருஷத்துக்கு முன்பே: 2000ம் ஆண்டு வெளியான காதல் ரோஜாவே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பூஜா குமார். மேஜிக் மேஜிக் 3டி எனும் தமிழ் படத்தில் நடித்த பூஜா குமார் அதன் பிறகு ஆங்கில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 2003ம் ஆண்டு வெளியான ஃபிளாவர்ஸ் எனும் ஆங்கில படத்தில் நடித்த பூஜா குமாருக்கு வரிசையாக பல ஆங்கிலப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Pooja Kumar shares Uttama VIllain making video and lend her support to Kamal Haasan

விஸ்வரூபம்: கமல்ஹாசன் இயக்கி நடித்து 2013ம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார் பூஜா குமார். விஸ்வரூபம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், அந்த படம் விஸ்வரூபம் 2 என இரு பாகங்களாக வெளியாகின. கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்திருந்தனர். முதல் பாகம் ஓடிய அளவுக்கு அதன் இரண்டாம் பாகம் ஓடவில்லை.

கமலுடன் நெருக்கம்: விஸ்வரூபம் படத்தில் டாக்டர் நிரூபமா விஸ்வநாத் என கமல்ஹாசனின் மனைவியாக இவர் நடித்திருப்பார். அந்த படத்தில் இருவரும் இணைந்து நடித்த நெருக்கமான காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. தொடர்ந்து உத்தம வில்லன் மற்றும் மீன் குழம்பும் மண் பானையும் உள்ளிட்ட படங்களிலும் கமல்ஹாசனுடன் பூஜா குமார் இணைந்து நடித்தார்.

Pooja Kumar shares Uttama VIllain making video and lend her support to Kamal Haasan

உத்தம வில்லன் நஷ்டம்: "தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9, கும்கி, கோலி சோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை, ரஜினிமுருகன் போன்ற தரமான மிகப்பெரிய வெற்றிப் படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களை தயாரித்து வெளியிட்ட எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தான் திரு. கமலஹாசன் அவர்களை வைத்து first copy (முதல் பிரதி) அடிப்படையில் தயாரித்த திரைப்படமான 'உத்தம வில்லன்' எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்திய படமாகும்." என இயக்குநர் லிங்குசாமி சமீபத்தில் அந்த படம் தொடர்பான அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

பூஜா குமார் வீடியோ: இந்நிலையில், திடீரென அந்த படத்தில் நடித்த நடிகை பூஜா குமார் உத்தம வில்லன் படத்திற்காக கதகளி கெட்டப் போட்டு நடிச்ச வீடியோவை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை பூஜா குமார் வெளியிட்டுள்ளாரா என கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X