வேம்புலி மனைவி முதல் சூரரைப் போற்று பொம்மி வரை.. ஓணம் சேலையில் வசீகரிக்கும் நடிகைகள்!
சென்னை: திருவோணம் திருநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் ரசிகர்களுக்கு ஓணம் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
தென்னிந்திய நடிகைகள் பலரும் ஓணம் சேலையில் கலக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை அலங்கரித்து வருகின்றனர்.
சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்த நடிகர் ஜான் கோக்கன் மனைவியும் நடிகையுமான பூஜா ராமசந்திரன் முதல் சூரரைப் போற்று படத்தில் பொம்மியாக அசத்திய அபர்ணா பாலமுரளி வரை ஏகப்பட்ட நடிகைகள் ஓணம் சேலையில் வசீகரிக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

வேம்புலியுடன் மனைவி
திருவோணம் திருநாளை முன்னிட்டு நடிகர் ஜான் கோக்கன் மற்றும் அவரது மனைவி பூஜா ராமசந்திரன் இருவரும் ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட்டை சமீபத்தில் நடத்தினர். அதன் புகைப்படங்களை ஓணம் திருநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருவரும் வைரலாக்கி வருகின்றனர்.

ஷிவாங்கி
ஓணம் பண்டிகையை முன்னிட்டு குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி கேரளா சேலையில் அட்டகாசமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அஸ்வினுக்காக அவர் பாடிய அடிபொலி பாடல் யூடியூபில் ஓணம் ஸ்பெஷலாக வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

கேஜிஎஃப் நடிகர் வீட்டிலும்
கேஜிஎஃப் ஹீரோ யஷ் வீட்டிலும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் பாரம்பரிய உடை அணிந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். கேஜிஎஃப் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ஜி தொலைக்காட்சி தென்னிந்தியாவில் கைப்பற்றியுள்ளது.

பீஸ்ட் நடிகை
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸும் நடித்து வருகிறார். இந்நிலையில், ஓணம் வாழ்த்துக்களை அபர்ணா தாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குட்டி நயனின் ஓணம்
குட்டி நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் நடிகை அனிகா சுரேந்திரன் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அசத்தலான போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அதில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

மாளவிகா மோகனன்
ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன் விஜய்யின் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்ததாக, நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் படத்திலும் மாளவிகா மோகனன் தான் ஜோடி. ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனக்கு மிகவும் பிடித்த சிகப்பு நிற உடையில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஓணம் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

பொம்மி
சூரரைப் போற்று படத்திற்கு சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகள் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கு கிடைக்காமல் ஷெர்னி படத்தில் நடித்த வித்யா பாலனுக்கு கிடைத்தது. ஆனாலும், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களை குஷிப்படுத்த தனது வசீகர பார்வையால் பொம்மி மாடிப் படியில் நடந்து வரும் போட்டோஷூட் வேற லெவல் ஸ்பெஷல் தான். மேலும், பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஓணம் வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











