பாட்டியின் 99வது வயது பிறந்தநாளை கொண்டாடிய பூஜா.. செஞ்சுரி அடிக்கணும்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க!

இலங்கை: மாதவனின் ஜே ஜே படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பூஜா உமாசங்கர். அஜித்தின் அட்டகாசம் படத்தில் ஹீரோயினாகவே நடித்து அசத்தினார். ஜித்தன், உள்ளம் கேட்குமே, தம்பி, பட்டியல், தகப்பன்சாமி, பொறி, ஓரம்போ, நான் கடவுள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இலங்கையை சேர்ந்த பூஜா தமிழ் சினிமாவை விட்டு சமீப காலமாக சிங்கள படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

தனது பாட்டியின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு பாட்டியுடன் எடுத்துக் கொண்ட க்யூட்டான போட்டோவை ஷேர் செய்து தனது வாழ்த்துக்களையும் கடவுளிடம் ஒரு கோரிக்கையும் வைத்துள்ள இன்ஸ்டா போஸ்ட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Pooja Umashankar celebrates her Grandma s 99th birthday

ரசிகர்களின் கிரஷ்: ஒரு காலத்தில் "பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்" என்றும் "பொள்ளாச்சி இளநீரே" என்றும் ரசிகர்கள் பூஜாவின் பாடல்களை பாடி அவரை சைட் அடித்துக் கொண்டிருந்தனர். ஏகப்பட்ட இளைஞர்களின் கிரஷ் மெட்டிரீயலாகவும் இருந்தார். நடிகர் ஆர்யாம் பூஜாவும் தொடர்ந்து பல படங்களில் நடித்த நிலையில், இருவர் பற்றிய காதல் கிசுகிசுக்களும் கிளம்பின. ஆனால், 2016ம் ஆண்டு பிரசாந்த் டேவிட் வேதிகன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு இலங்கையில் செட்டி ஆகி விட்டார் பூஜா.

99 வயது பாட்டி: 60 முதல் 70 வயதை கடப்பதே இந்த காலத்தில் பெரிய விஷயமாக உள்ள நிலையில், சிலர் 80 வயதிலும் ஆக்டிவாக இருப்பதை பார்க்க முடிகிறது. ஒரு சிலர் ரொம்பவே கட்டுக்கோப்பான வாழ்க்கை மற்றும் உடல் ஆரோக்கியத்தில் செலுத்திய அக்கறை காரணமாக 99 வயதை கடந்தும் வாழ்ந்து வருகின்றனர். பூஜாவின் பாட்டிக்கு 99 வயது என்றும் டைம்லஸ் பியூட்டி என்றும் வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்தால் இந்த வயதிலும் ஆரோக்கியமாக உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தையும் வாழ்க்கையில் நல்ல பழக்கவழக்கங்களை கடை பிடிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.

செஞ்சுரி அடிக்கணும்: கடவுள் கருணை உனக்கு அதிகமாகவே இருக்கும் பாட்டி, உன்னுடைய காலத்தை சந்தோஷமாக ஒவ்வொரு நொடியும் என்ஜாய் பண்ணு என அடுத்த வருடமும் இதே போல உன்னுடன் ஒரு போஸ்ட் போட வேண்டும் என்கிற தொனியில் பூஜா போட்டுள்ள பதிவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 2016க்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த பூஜா கடந்த 2024ல் சிஹினாயகி அதாரே எனும் சிங்களப் படத்தில் நடித்திருந்தார். இன்னொரு படத்திலும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மீண்டும் தமிழ் சினிமாவுக்கு பூஜா வரவேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X